ஷூட்டிங்கில் சிம்மிஷம் செய்த சிவகார்த்திகேயன் … புலம்பிய கீர்த்தி சுரேஷ்!

ஷூட்டிங்கில் சிம்மிஷம் செய்த சிவகார்த்திகேயன் … புலம்பிய கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக மீடியா உலகில் நுழைந்து அதன் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அறிமுகமான புதிதிலேயே தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ரஜினி முருகன் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்கள் . நடிகர் சூரி தற்போது கருடன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் .இப்படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்று வரும் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி முருகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து இருக்கிறார் .

அதாவது. இப்படத்தில் நானும் சிவகார்த்திகேயனும் நடித்த போது இயக்குனர் எழுதிக் கொடுத்த டயலாக்கை பேச மாட்டோம் சாட் ரெடி என்றதும் நாங்கள் பாட்டுக்கு எங்கள் இஷ்டத்துக்கு பேசுவோம். அந்த சமயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் பொன்ராம் சாரிடம் சென்று சார் என்னோட டயலாக் என்ன? என்று கேட்பார் .

அதற்கு பொன்ராம் சார்… ஏம்மா அவங்க கொடுக்கிற டயலாக் பேச மாட்டாங்க. அவங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கும் பேசுவாங்க. நீ தயவு செய்து இந்த டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்யாத என்று கூறுவார். அதுக்கு கீர்த்தி சுரேஷ் அப்போ நான் எப்படி சார் என் டைமுக்கு என்னோட டயலாக் பேசுறது? என ஒரு புலம்புவார். அப்படித்தான் அந்த கார் வாங்குற காட்சியில் “இவ்வளவு இங்கிலீஷ் பேச தெரிஞ்ச உனக்கு அதை யார்கிட்ட பேசணும்னு தெரியல பார்த்தியா” என்று பாட்டில் பேசி விட்டேன் அது மிகப்பெரிய அளவில் கைதட்டல் வாங்கியது என சூரி பேசியிருந்தார்.