கச்சான் அலேர்ஜி பிரச்சனைக்காக BBC நிருபரை விமானத்தில் இருந்து இறக்கி விட்ட பைடலட்

கச்சான் அலேர்ஜி பிரச்சனைக்காக BBC நிருபரை விமானத்தில் இருந்து இறக்கி விட்ட பைடலட்

உலகப் புகழ்பெற்ற BBC TVயில் காலநிலை தொடர்பான அறிவிப்பாளராக இருக்கிறார், ஜோர்ஜி பாமர். இவரும் இவரது குடும்பமும் லண்டன் கட்-விக் விமான நிலையத்தில் இருந்து, சன் எக்ஸ்பிரஸ்(Sun Express) விமானசேவை மூலமாக, துருக்கி செல்ல இருந்தார்கள். அவருக்கு 2 பெண் பிள்ளைகள். அதில் றோசி(12) என்ற பிள்ளைக்கு கச்சான்(வேர் கடலை) இல் அலேர்ஜி உள்ளது. வேறு யாராவது அதை உண்டால் கூட அவருக்கு உடல் உடனே கடிக்க ஆரம்பித்து விடும்.

கச்சானில் இருந்து வரும் வாசம் கூட அவருக்கு அலேர்ஜி தான். இதனால் அவர்களுக்கு அருகில் இருக்கும் பயணிகள் யாரும் கச்சான் சாப்பிட வேண்டாம் என்று, ஒலிபெருக்கி வழியாக அறிவிக்குமாறு கேட்டுள்ளார் ஜோர்ஜியா. ஆனால் விமான பணிப் பெண்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் விமானியிடம் அவர் பேசியுள்ளார். ஆனால் பைலட்டும் அதனை மறுத்துவிட்டார். இன் நிலையில் ஜோர்ஜியா, எழுந்து சத்தமாக தயவு செய்து எவரும் கச்சான் சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த பைலட், அவர்களை விமானத்தில் இருந்து கீழே இறங்கும்படி கூறியுள்ளார். அவர்கள் மறுக்கவே உடனே அதிகாரிகளை அழைத்து பலவந்தமாக விமானத்தில் இருந்து, கீழே இறக்கி விட்டுள்ளார்கள். இந்தச் செயலால் அதிர்ந்து போனார் ஜோர்ஜியா.  12 வயதுச் சிறுமி என்று கூடப் பாராமல் அவர்கள் அனைவரையும் இறக்கி விட்டுச் சென்று விட்டது அந்த விமான சேவை.

தற்போது குறித்த செய்தி காட்டுத் தீ போல  பரவி வருவதோடு, சன் எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது. ஒரு 12 வயதுச் சிறுமியின் , நிலை குறித்து கூட உங்களால் கவனமாக இருக்க முடியவில்லையா ? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுவும் போயும் போய் BBC நிருபருடனா மோதவேண்டும் ? ஊடகவியலாளர்களோடு மோதுவது என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதனை விமானசேவை தற்போது நன்றாக புரிந்துகொண்டு இருக்கும்.  மேலும் சொல்லப் போனால் ரையன் ஏர் விமான சேவை, மற்றும் ஈசி ஜெட் விமான சேவை போன்ற பல நிறுவனங்கள், அலேர்ஜி உள்ள பயணிகள் பயணித்தால், அது குறித்து அனைவருக்கும் அறிவிப்பு ஒன்றை வெளிப்படுத்துவதோடு. கச்சான் போன்ற அலேர்ஜி உணவுகளை கொடுப்பதை உடனே நிறுத்தி விடுவார்கள்.