Posted in

அருண் IPSக்கு அதிகாரத்தை கொடுப்பதா ? திருமா போடும் மாஸ்டர் பிளானால் ஆட்சிக்கே ஆப்பு

தமிழக ஆட்சியில் முக்கிய இடத்தில் உள்ள தொல். திருமாவளவன் அவர்கள், முதல்வர் விஜய் அவர்களுக்குத் தொடர்ச்சியாக ஒரே ஒரு அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார். அது என்னவென்றால், பட்டியலினத்தைச் சேர்ந்தவரான அருண் ஐ.பி.எஸ்-ஸை, தமிழக உளவுத்துறைத் தலைமைப் பொறுப்பாளராக நியமிப்பதுதான். இது ஏன் என்பது ஒருபுறம் இருக்க, இந்த அருண் ஐ.பி.எஸ் என்பவர் யார் என்று பார்த்துவிடலாம். கடந்த திமுக ஆட்சியில், சேகர்பாபுவின் கையாள் போலவும், மு.க.ஸ்டாலினுடன் நேரடித் தொடர்பிலும் இருந்தவர்தான் இந்த அருண் ஐ.பி.எஸ்.

அதுமட்டுமில்லாமல், சென்னையில் எங்கெல்லாம் காலி மனை, வீடு மற்றும் நிலத் தகராறுகள் ஏற்படுகிறதோ, அந்த கட்டப்பஞ்சாயத்துகளைத் தீர்த்து வைத்து, அதன் மூலம் பல கோடிகளைச் சுருட்டியவர் இந்த அருண். இதுமட்டுமல்ல… தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் சென்னை பரப்புரைகள் பல ரத்தாக இவரே முக்கிய காரணமாகவும் இருந்தவர். ஒட்டுமொத்தத்தில் திமுகவின் ஒரு மிகப்பெரிய அடியாளைப் போலச் செயல்பட்ட இவரை, எப்படி மீண்டும் முக்கிய பதவியில் அமர்த்துவது என்பது பெரும் கேள்விக்குறி.

இதுவரை நிலத் தகராறு பேரத்தில் சுமார் 500 கோடி ரூபாய் வரை அருண் லாபம் பார்த்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், எப்படி திடீரென தொல். திருமா இந்த அத்தியாயத்தில் குதித்தார் என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராக உள்ளது. அருண் பெரும் தொகையான பணத்தைத் தொல். திருமாவுக்குக் கொடுத்து, தனக்காக விஜயிடம் பரிந்து பேசச் சொன்னாரா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. இந்த அருண் ஐ.பி.எஸ் அதிகாரிதான், ஸ்டாலின் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.

அப்போது சவுக்கு சங்கர் வீட்டுக்கு போலீசாரை அனுப்பி, சவுக்கு சங்கரின் தாயாரின் உடைகளை அகற்றிச் சோதனை செய்ய வைத்ததாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இறுதியாக இறந்தும் போனார் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படிப் பல செயல்களை திமுகவிற்காகச் செய்து, சந்து பொந்தில் 300-க்கும் மேற்பட்ட நிலத் தகராறுகளுக்கு இடைத்தரகராக நின்று, பெரும் பணத்தைக் கொள்ளையடித்த அருண் இன்று மீண்டும் பதவிக்கு வரவுள்ளாரா?

இல்லை, இந்தத் தருணத்திலாவது விஜய் விழித்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. “பட்டியலினச் சமூகம் என்பதற்காகத்தான் அவரை நியமிக்க வேண்டுகிறேன்” என்ற திருமாவின் கோரிக்கையை விஜய் ஏற்பாரா? இல்லை, இது ஆட்சிக்கே ஆபத்தாக முடியுமா என்பதும் இனி வரும் நாட்களில்தான் தெரியவரும்.