விஷால் படத்தை ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய தளபதி விஜய் சின்ன தியேட்டரில் ரத்தினம் !

விஷால் படத்தை ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய தளபதி விஜய் சின்ன தியேட்டரில் ரத்தினம் !

விஷால் நடித்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியானது ரத்தினம் என்ற படம். இதற்கு மிகப்பெரிய வரவேற்ப்பு இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்கப்பட்ட நிலையில். ரத்தினம் படம் சிறிய சிறிய தியேட்டர்களில் தான் வெளியிடப்பட்டுள்ளது. ஏன் என்று கேட்டால் எல்லா பெரிய தியேட்டர்களிலும் தளபதி நடித்த கில்லி படம் ரி-ரிலீஸ் ஆகி சக்கைப் போட்டு போட்டுக்கொண்டு இருக்கிறது.

சமீப காலமாக முன்னணி ஹீரோக்கள் நடித்து வெளியான படங்களை, ரி-ரிலீஸ் செய்து வருகிறார்கள். மக்களும் இதனை விரும்பிச் சென்று குடும்பத்தோடு பார்த்து வருகிறார்கள். இதனால் நல்ல வருமானம் கிட்டி வருகிறது. அந்த வகையில் தளபதி நடித்த கில்லியை ரி-ரிலீஸ் செய்துள்ளார்கள். இதனால் நல்ல வருமானம் இருப்பதால், பெரிய தியேட்டர் உரிமையாளர்கள், விஷால் நடிப்பில் வெளியான ரத்தினம் படத்தை திரையிட மறுத்துவிட்டார்களாம்.

என்ன கொடுமை சரவணா ? எனக்கு இப்படி ஒரு சோதனையா என்று தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்துள்ளாராம் நடிகர் விஷால். என்ன செய்வது தளபதியை அடிச்சுக்க முடியுமா என்ன ?