ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவின் மையப்பகுதியில் அமைந்துள்ள கின்சா (Ginza) என்ற ஆடம்பர வணிக வளாகத்தில், மர்ம நபர் ஒருவர் திடீரென நச்சு வாயுவை தெளித்ததால் அங்கு கடுமையான நெடி பரவியுள்ளது. இந்த விசித்திரமான மற்றும் கடுமையான வாசனையை சுவாசித்த அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் தொண்டை எரிச்சல், கடுமையான இருமல் மற்றும் மயக்கம் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன. இந்த ரசாயனத் தாக்குதலில் குறைந்தது பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பேர் அவசர அவசரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே 25 மதியம் 12 மணியளவில், இந்த வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள வங்கி ஏடிஎம் (ATM) மையம் அருகே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது . கறுப்பு நிற ஜாக்கெட் மற்றும் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஏடிஎம் பகுதியில் ஏதோ ஒரு மர்ம திரவத்தையோ அல்லது வாயுவையோ தெளித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனடியாக அந்தப் பகுதி முழுவதும் கடுமையான நெடி பரவி, மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதால் அந்த ஆடம்பர வணிக வளாகமே சில நிமிடங்களில் போர்க்களம் போலக் காட்சியளித்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் டோக்கியோ தீயணைப்புத் துறையைச் சேர்ந்த -க்கும் மேற்பட்ட அவசரக்கால வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ரசாயன தடுப்புப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக ஸ்ட்ரெச்சர்கள் (Stretchers) மூலம் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் . மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த வணிக வளாகம் முழுவதும் உடனடியாகப் பொதுமக்களிடமிருந்து காலி செய்யப்பட்டு, ஒட்டுமொத்தப் பகுதியும் போலீசாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .
கட்டுப்பாடற்ற தொண்டை எரிச்சல் மற்றும் உணர்வின்மை காரணமாகப் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில், தெளிக்கப்பட்ட அந்த விசித்திரமான வாயு என்ன வகையான ரசாயனம் என்பதை அறிய டோக்கியோ தடய அறிவியல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய அந்த மர்ம நபரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஜப்பானில் கடந்த காலங்களில் ரயில் மற்றும் பொது இடங்களில் நடந்த ரசாயனத் தாக்குதல்களை இந்தச் சம்பவம் நினைவூட்டுவதால், தலைநகர் டோக்கியோ முழுவதும் தற்போதைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.