பாலாவின் கொடுத்த டார்ச்சர்…. சினிமாவை விட்டே ஓடிய பிரபல நடிகைகள்!

பாலாவின் கொடுத்த டார்ச்சர்…. சினிமாவை விட்டே ஓடிய பிரபல நடிகைகள்!

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனரான பாலா தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் பல்வேறு டார்ச்சர்கள் கொடுப்பார். குறிப்பாக மனரீதியாகவும், உடன் ரீதியாகவும் அவர்களை கொடுமைப்படுத்தி திரைப்படங்களில் நடிக்க வைத்து அதன் மூலம் ஹிட் கொடுப்பார் என்று பல செய்திகள் அவர்களாகவே வெளிவந்து பேசியது நாம் கேட்டிருப்போம் அப்படி பாலாவின் டார்ச்சரால் கொடுமை தாங்க முடியாமல் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

நடிகை இவானா:

நாச்சியார் படத்தில் நடிகை இவானா சிறு வயதிலேயே கற்பழிப்பு காட்சி, கர்ப்பிணி ரோலில் நடிப்பது என்று பல டார்ச்சர்களை அனுபவித்திருக்கிறாராம். இவானாவின் நடிப்பை நடிகை ஜோதிகாவே மேடையில் பாராட்டி இருக்கிறார்.

நடிகை பூஜா

நான் கடவும் படத்தில் நடிகை பூஜா, கண் தெரியாத பெண்ணாக நடித்து கஷ்டப்பட்டிருக்கிறார் பூஜா. ஒரு நாள் முழுக்க கண்ணில் லென்ஸ் அணிந்து மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதிலும் மொட்டை ராஜேந்திரனிடம் அடிவாங்கி உயரத்தில் இருந்து கீழே உருண்டு விழுவது என்று பல டார்ச்சர்களை அனுபவித்தார். சோகம் என்னவென்றால் அப்படத்தை தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனார்.

நடிகை வேதிகா:

பால் மேனிகொண்ட நடிகை வேதிகா பரதேசி படத்தில் கருப்பாக காட்ட 4 மணி நேரம் மேக்கப் போட்டாராம். அப்படத்தில் வேதிகா வாங்கிய அடிகளும் மிதிகளும் எதார்த்தமாக இருக்க உண்மையாகவே அதை நடத்தியிருக்கிறார் பாலா.

நடிகை மமிதா பாஜு

பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்த நடிகை மமிதா பாஜு அப்படத்தில் பாலா தன்னை அடித்ததாக கூறி ஷாக் கொடுத்தார்.