சீரியல் நடிகை விபத்தில் மரணம்… நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

சீரியல் நடிகை விபத்தில் மரணம்… நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

தெலுங்கு தொலைக்காட்சியில் Trinayani என்ற சீரியலில் நடித்த பெரும் புகழ் பெற்றவர்கள் தான் பவித்ரா ஜெயராம் மற்றும் நடிகர் சந்திரகாந்த். இவர்கள் இருவரும் ஒன்றாக அதே சீரியலில் நடித்து வந்தார்கள். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் பொதுவெளியில் இதுவரை அறிவிக்காமல் இருந்து வந்தனர்.

விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த ஜோடி காரில் பயணிக்கும் போது சில தினங்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு அந்த விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே பவித்ரா ஜெயராம் உயிரிழந்து விட்டார். இதில் நடிகர் சந்திரகாந்த் மற்றும் தப்பித்து இருக்கிறார். பின்னர் அவர் சில ஆண்டுகள் பவித்ரா நினைத்து மிகுந்த மன கவலையில் இருந்ததை அடுத்து இன்று நேற்று இரவு. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த செய்தி டோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது. பவித்ரா இறந்த துக்கத்திலிருந்து சந்திரகாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். இது சின்னத்திரை ரசிகர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் தங்களது காதலை அறிவிக்கலாம் என இருந்த இந்த காதல் ஜோடிகளுக்கு இவ்வளவு துயரமான சம்பவமாக என ரசிகர்கள் வேதனையுடன் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.