அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள டியர்போர்ன் (Dearborn) நகரம், அமெரிக்காவிலேயே அரபு வம்சாவளியினர் அதிகம் வாழும் முக்கியப் பகுதியாக விளங்குகிறது. ஈரானுக்கு எதிரான ராணுவ மோதல்கள் காரணமாக அங்குள்ள பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதல்களால் பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதோடு, வாழ்க்கைச் செலவினமும் அதிகரித்துள்ளதால் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தல்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. கடந்த தேர்தல் காலத்தில் அரபு சமூகத்தினர் கணிசமான அளவில் டம்பிற்கு ஆதரவளித்த போதிலும், தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானுடன் போர் தொடுப்பது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த காலங்களில் வெளிநாட்டுச் சண்டைகளில் ஈடுபட மாட்டோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாகப் போர் தொடங்கியது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்காளர் மத்தியில் எதிர்ப்பு அலைகள் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மோதல்கள் அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சர்வதேச விவகாரங்களைச் சமாளிப்பதில் நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து மக்களிடம் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் நெருங்கும் வேளையில், அரபு அமெரிக்கர்கள் செறிந்த இந்தப் பகுதியில் நிலவும் அரசியல் சூழல் அமெரிக்க அரசியலில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.