அமெரிக்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழக்கக் காரணமான நிதால் ஹசனுக்கு (Nidal Hasan) விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 3ஆம் தேதி துப்பாக்கிச் சுடும் குழு மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த மரண தண்டனையை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப் போவதாகப் பென்டகன் மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் பிேட் ஹெக்செத் அறிவித்திருந்தனர். இந்த நேரலை ஒளிபரப்பு தீவிரவாத அமைப்புகளுக்குப் பிரச்சாரக் கருவியாக மாறக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், நேரலையாகக் காட்டுவது தொடர்பாகவும் காட்டாமல் இருப்பது தொடர்பாகவும் இருவேறு கருத்துகள் நிலவுவதாகத் தெரிவித்தார். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையலாம் என்ற கோணமும் விவாதிக்கப்படுவதால், இறுதி முடிவை விரைவில் எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குடியரசுக் கட்சியின் முக்கியத் தலைவர்களான மைக் ஜான்சன் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் போன்றோர் இந்த நேரலை ஒளிபரப்புக்குத் எதிர்ப்பையும் கவலையையும் பதிவு செய்துள்ளனர்.
மரண தண்டனை நேரலை ஒளிபரப்பு விவகாரம் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகையின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாதுகாப்புத்துறையின் ஆலோசனைகளைக் கேட்டறிந்த பிறகு அதிபர் டிரம்ப் இது தொடர்பான இறுதி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.