சர்ச்சை பிரபலத்தை காதலியோடு களமிறக்கும் விஜய் TV …. களோபரத்தை உண்டாக்கும் பிக்பாஸ் சீசன் 8!

சர்ச்சை பிரபலத்தை காதலியோடு களமிறக்கும் விஜய் TV …. களோபரத்தை உண்டாக்கும் பிக்பாஸ் சீசன் 8!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு சென்சேஷனல் நிகழ்ச்சியாக மிகப்பெரிய அளவில் டிஆர்பி உச்சத்தை தொட்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக முதல் ஏழு சீசன் வரை கமல்ஹாசனை தொகுத்து வழங்கி நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு சீசனை தொகுத்து வழங்க மட்டும் கமல்ஹாசன் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடி சம்பளமாக வாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மிகப்பெரிய அளவில் பிரபலத்தை அடைந்து அதன் பிறகு சினிமா வாய்ப்புகளை மிகவும் சுலபமாக பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது விரைவில் 8வது சீசன் துவக்கவிருக்கிறது.

இதற்கான போட்டியாளர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபலமான காதல் ஜோடியை போட்டியாளர்களாக விஜய் டிவி களம் இறக்கி அதன் மூலம் டிஆர்பியின் உச்சத்தை தொட மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறதாம்.

அவர்கள் வேறு யாரும் இல்லை யூடியூப் பிரபலமும், நடிகருமான TTF வாசன் மற்றும் அவரின் காதலி சோயா ஷாலினி தான். சோயா ஷாலினி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது இவர்கள் இருவரையும் ஜோடியாக உள்ளே போட்டு ஒரு ரொமான்டி படம் ஓட்டும் ஐடியாவில் மாஸ்டர் பிளான் போட்டுள்ளாராம் விஜய் டிவி. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.