ரஜினி, கமல் , நயன்தாரா… வீடு வீடா சென்று திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வரலக்ஷ்மி!

ரஜினி, கமல் , நயன்தாரா… வீடு வீடா சென்று திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வரலக்ஷ்மி!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர ஹீரோ என்று வலம் வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர்.

நடிகை ராதிகாவை மறுமணம் செய்து கொண்டு தற்போது குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் இவருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

மும்பையை சேர்ந்த நிகோலஸ் என்ற தொழிலதிபரை ரகசியமாக கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நடிகை வரலட்சுமி. பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இந்நிலையில் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினி ,கமல், நயன்தாரா, சித்தார்த் என பல பிரபலங்களின் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்து அவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.