இன்று காலை சென்னை கொளத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகள் பலரும், ஏதோ பேயைப் பார்த்தது போல செம ஷாக்கில் உறைந்து போயிருக்காங்க. என்னடான்னு பார்த்தா, முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுற கொளத்தூர் தொகுதியில இருக்குற பல வீட்டு வாசல்ல, விடிய காலையிலேயே ‘விசில்’ (Whistle) சின்னம் கோலமா ஜொலிச்சுக்கிட்டு இருக்கு. காலம் காலமா திமுகவோட அசைக்க முடியாத கோட்டையா இருந்த கொளத்தூர் மக்கள், இப்புடி திடீர்னு த.வெ.க (TVK) பக்கம் சாஞ்சதை பார்த்து ‘உடன்பிறப்புகள்’ எல்லாம் செம டென்ஷன்ல இருக்காங்க. அதுவும் விஜய்க்கு பெண்கள் ஓட்டு தான் ‘மெயின் சோர்ஸ்’ங்கிறதால, கொளத்தூரோட தற்போதைய நிலையை நினைச்சு அறிவாலயம் பக்கம் ஒரே கவலையா இருக்காம்.
நேத்து சென்னையில ஒரு ஸ்டார் ஹோட்டல்ல நடந்த பிரம்மாண்ட விழாவில, த.வெ.க தலைவர் விஜய் அவரோட ‘மேனிஃபெஸ்டோவை’ ரிலீஸ் பண்ணிட்டு, கடைசியா மக்களுக்கு ஒரு கியூட் ரிக்வஸ்ட் ஒன்னு வச்சாரு. “தயவுசெஞ்சு நீங்க காலையில வீட்டு வாசல்ல கோலம் போடும்போது, நம்ம ‘விசில்’ சின்னத்தை கோலமா போடுங்க”ன்னு அவரு கேட்டதுக்கு, பல்லாயிரம் ரசிகர்கள் ‘விசில் போடு’ன்னு களத்துல இறங்கிட்டாங்க. அவரோட பேச்சைத் தட்டாம இன்னைக்கு கொளத்தூர்ல இருக்குற பல வீட்டு வாசல்லயும் விசில் கோலம் தூள் கிளப்புது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத திமுகவினர், “இது என்னடா வம்பா போச்சு!”ன்னு மண்டையை பிடிச்சுக்கிறாங்க.
விஜய் போட்டியிடுற பெரம்பூர் தொகுதியில மட்டும் சுமார் 40,000 இளைஞர்களும் பெண்களும் த.வெ.க-வுல மெம்பரா இருக்காங்களாம். மொத்தமா 2 லட்சம் வாக்காளர்கள் இருக்குற அந்தத் தொகுதியில, விஜய் பெரிய வாக்கு வித்தியாசத்துல ஜெயிப்பாருங்கிறது ஊருக்கே தெரிஞ்ச விசயம் தான். ஆனா குடைச்சல் எங்க வருதுன்னா, பெரம்பூர் பார்டர்ல இருக்குற கொளத்தூர்ல தான்! பெரம்பூர்ல இருக்குற அந்த 40,000 த.வெ.க தொண்டர்களும் இப்போ கொளத்தூருக்குள்ள புகுந்து தங்களோட வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ‘எங்க வீட்ல விசில் கோலம் இருக்கு, உங்க வீட்ல இல்லையா?’ன்னு கேட்டு, ஒவ்வொரு வீடாப் போய் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு அவங்க கேட்கிற விதம், திமுகவுக்கு பெரிய தலைவலியை உண்டாக்கியிருக்கு.
நிஜமா சொல்லப்போனா, தேர்தலுக்கு முன்னாடியே விஜய் ஒரு மாஸ்டர் பிளான் போட்டு மக்களோட நாடி துடிப்பைப் பார்த்துட்டாருன்னே சொல்லலாம். இன்னைக்கு காலையிலேயே பெரம்பூர் மற்றும் கொளத்தூர்ல எத்தனை வீடுகள்ல விசில் கோலம் இருக்குன்னு த.வெ.க-வினர் கணக்கெடுத்து முடிச்சுட்டாங்க. விஜய் ஒன்னும் மத்தவங்க சொல்ற மாதிரி சாதாரண ஆள் இல்ல, அரசியல்ல ‘மாஸ்டர் பிளான்’ போடுறதுல இப்போ அவர் செம கில்லாடியா இருக்காரு. இதே ட்ரெண்ட் நீடிச்சா, கொளத்தூர்ல ஸ்டாலின் ஐயா பெரிய டஃப் ஃபைட்டை (Tough Fight) சந்திக்க வேண்டியிருக்கும். மே 4-ம் தேதி தேர்தல் ரிசல்ட் வரும்போது தான் தெரியும், இந்த ‘விசில் கோலம்’ மேஜிக் வேலை செஞ்சிருக்கான்னு!