Posted in

பிரிட்டனில் நாளை மின் தடை ஏற்படுமா? நேஷனல் கிரிட் விளக்கம்

பிரிட்டனில் நவம்பர் 19-ஆம் தேதி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மின் தடை (Blackout) ஏற்படும் எனச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நேஷனல் கிரிட் (National Grid) நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மின் விநியோகத்தில் கடுமையான பழுது ஏற்பட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று வலம் வந்த போலிச் செய்திகள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, அந்தத் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தத் தகவல்கள் முற்றிலும் புனையப்பட்டவை என்றும், பிரிட்டனில் எந்தவொரு மின் தளையும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நேஷனல் கிரிட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற போலியான தகவல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், வதந்திகளைப் பரப்பும் பதிவுகளைச் சமூக வலைதளத் தளங்களில் புகாரளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் விநியோகம் தொடர்பான துல்லியமான மற்றும் உண்மையான விவரங்களை அறிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஊடகங்களை மட்டுமே அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாகத் தற்காலிக மற்றும் அவசர காலத் தயாரிப்புகள் குறித்துத் தரப்படும் வழிகாட்டுதல்களைத் தவறாகப் பயன்படுத்தி, இது போன்ற போலியான வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், மின் கட்டமைப்பு வழக்கம்பேலவே சீராக இயங்கி வருவதாகவும் தொடர்புடைய துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன், பிரிட்டன் முழுவதும் மின்சார விநியோகம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எவ்வித வதந்திகளையும் நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறு தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.