ரிஃபார்ம் கட்சியின் தலைவரான நைஜல் ஃபராஜ் (Nigel Farage), லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அதிரடியான கொள்கைத் திட்டத்தை வெளியிட்டார். அப்போது ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்வோரின் ஆபத்தான பயணங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் 43 அடி நீளமுள்ள மாதிரி அகதிகள் படகுக்கு அருகில் அவர் நின்றுகொண்டு புதிய திட்டங்களை விளக்கினார். தற்போதைய புகலிட முறை நாட்டின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தத் திட்டத்தின்படி, தற்போதைய நிலுவையில் உள்ள அனைத்துப் புகலிட விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படும் என்றும், தகுதியற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தத் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாகவும், சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களை நாட்டுக்கு வெளியேற்றுவதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் ஃபராஜ் கூறினார்.
கட்சியின் இந்தப் புதிய அறிவிப்பு பிரிட்டன் அரசியல் வட்டாரங்களிலும் மனித உரிமை அமைப்புகரிடையேயும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அரசியல் கட்சிகள் இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தங்கள் கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றன.
வரவிருக்கும் தேர்தல்களில் குடிவரவு மற்றும் புகலிடக் கொள்கைகள் பிரதான விவாதப் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரிஃபார்ம் கட்சியின் இந்த நிலைப்பாடு பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.