வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: கிளிக் செய்து பார்க்கவும்
நேற்றைய தினம் ‘தளபதி’ விஜய் தனது மாஸான கடைசி பரப்புரையை முடிச்சிட்டு, அப்படியே சொகுசா ஈசிஆர் (ECR) ரோடு வழியா நீலாங்கரை வீட்டுக்கு போயிட்டு இருந்தாரு. அப்போ பாருங்க ஒரு காமெடி! விஜய்க்கு ஒரு பாடம் கற்பிக்கணும்னு முடிவு பண்ண நம்ம தொல். திருமாவளவனின் விசிக (VCK), கூடவே கை கோர்த்த காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பு ஒரு ‘மெகா பிளான்’ போட்டாங்க. ஒரு சில நூறு இளைஞர்களைப் பிடிச்சு, அவங்க கையில விசிக, திமுக கொடியைக் கொடுத்து, “விஜய் வரும்போது இந்தக் கொடியைக் காட்டி சீண்டி விடுங்கப்பா”ன்னு ஒரு 200 ரூபாயையும் கொடுத்து ரோட்டுல நிக்க வச்சாங்க.
விஜய் அந்தப் பக்கமா வரும்போது கொடியை ஆட்டி அவரை டென்ஷன் ஆக்கணும்ங்கிறது தான் இவங்களோட பிளான். ஆனா நடந்தது என்னவோ வேற! நம்ம பசங்க இருக்காங்களே.. விஜய் கார் பக்கத்துல வந்த உடனே, வாங்குன காசு, கையில் இருந்த கொடி எல்லாத்தையும் மறந்துட்டு, திடீர்னு ஒரு ‘அந்தர் பல்டி’ அடிச்சுட்டாங்க. கொடியை மறைச்சு வச்சுட்டு, “தலைவா.. விஜய் அண்ணா..”ன்னு கையை அசைச்சு தங்களோட ஆதரவை ஆவேசமா வெளிப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. பாவம், ஆப்போசிட் பார்ட்டி போட்ட பிளான் அப்படியே சுக்குநூறாக உடைஞ்சு சின்னாபின்னமாகிடுச்சு!
இந்த வீடியோ இப்போ சோஷல் மீடியாவில செம வைரல். இதை விட ஒரு பெரிய காமெடி என்னன்னா, அந்தத் தம்பிங்க கையில் விசிக கொடியை வச்சுக்கிட்டே விஜய்க்கு ‘ஜே’ போட்டதைப் பாத்துட்டு, விவரம் தெரியாத சில நெட்டிசன்கள் “விசிக-வே டிவிிகே-வோட இணைஞ்சிருச்சு”ன்னு கமெண்ட் போட்டு கலாய்ச்சிட்டு இருக்காங்க. ‘எதிர்ப்பு’ தெரிவிக்க வந்த கூட்டம், ஒரே செகண்ட்ல ‘எனர்ஜி’ ஏத்துற கூட்டமா மாறுனதைப் பார்த்துட்டு, அந்த ஏரியா திமுக நிர்வாகிகள் “என்னடா இது நம்ம காசுல நமக்கே வச்ச வேட்டு”ன்னு அப்செட் ஆகிட்டாங்களாம்.
நிஜமாவே இந்த மனுஷன் பல கோடி உள்ளங்களை வெறும் நடிப்பால மட்டும் கட்டிப்போடல, அவரோட பேச்சும் நேர்மையும் தான் இன்னைக்கு எல்லாரையும் கவர்ந்திருக்கு. இன்னைக்கு டெல்லியில இருக்குற மத்திய அமைச்சர்களே விஜய்யை பத்தி பேசுற அளவுக்கு, பிஜேபி-க்கு (BJP) ஒரு பெரிய தலைவலியை விஜய் குடுத்திருக்காருங்கிறது தான் நிசமான உண்மை. ஒரு நேஷனல் பார்ட்டியே ஒரு நடிகரோட அரசியல் வருகையைப் பாத்து திணறுதுன்னா, இது ‘தளபதி’ விஜய்க்கு கிடைச்ச முதல் வெற்றிதான். பொறுத்திருந்து பார்ப்போம், நாளைக்கு இந்தத் தொண்டர் படை என்னென்ன வித்தைகளை காட்டப்போகுதுன்னு!