Posted in

சொல்லி அடித்த விஜய்- சபதம் எடுத்து RD சேகரை போட்டுத் தள்ளி விட்டார் !

கேள்வி கேட்ட பெண்கள் சிலரைக் காலால் எட்டி உதைத்த திமுக பிரமுகர் ஆர்.டி. சேகரை எதிர்த்து நின்று, அவரை இந்தத் தேர்தலில் வீழ்த்தி, சட்டசபைக்கு வரவிடாமல் செய்வேன் என்று விஜய் ஒரு சபதம் எடுத்தார். அதிலும் ஆர்.டி. சேகர் உதைத்த பெண்களில் ஒருவர் கர்ப்பமாக இருந்தார் எனப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சற்று முன்னர் ஆர்.டி. சேகரை வென்று, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய், உத்தியோகபூர்வமாக எம்.எல்.ஏ (MLA) ஆகியுள்ளார்.

இதனூடாகத் தமிழகச் சட்டமன்றத்திற்குள் விஜய் அவர்கள் காலடி எடுத்து வைக்க உள்ளார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், திமுக இரண்டாம் இடத்தில் இருப்பதால் அதுவே எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பெரும் கேள்விக்குறி. காரணம், ஸ்டாலின் தோல்வியடைந்துள்ள நிலையில், அனுபவம் இல்லாத உதயநிதியை எப்படி எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதனால் திமுக கோட்டையில் பெரும் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகக் கூறப்படும் அதேவேளை, விஜய்க்கு ஆட்சி அமைக்க இன்னும் சுமார் 10 எம்.எல்.ஏ-க்களே தேவை. எனவே, திமுக அல்லது அதிமுகவில் உள்ள சிலர் TVK கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலையைச் செங்கோட்டையன் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். இதனால் அதிமுகவில் உள்ள சில எம்.எல்.ஏ-க்கள் TVK கட்சிப் பக்கம் தாவும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.