கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, உடல்நலக்குறைவால் நவம்பர் 19-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 108 ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது மறைவால் கொளத்தூர் தொகுதி காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் 107 உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்தது. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சியின் பலம் 109 ஆக உயர்ந்திருந்தது.
வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து வெளிப்படைத்தன்மையுடன் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தவெக வசம் இருந்த திருச்சி கிழக்கு மற்றும் கொளத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன.
இதனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மை மற்றும் கூட்டணி நிலவரம் குறித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் அதிகரித்துள்ளது. கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட காலியான தொகுதிகளுக்குத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் இடைத்தேர்தல் நடைமுறைகள் எதிர்நோக்கப்படுகின்றன.