பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்த இடத்தை அழகாக மாற்றிய யாஷிகா? அவரே சொன்ன தகவல்!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்த இடத்தை அழகாக மாற்றிய யாஷிகா? அவரே சொன்ன தகவல்!

கோலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் முதன் முதலில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நீச்சல் உடை பயிற்சியாளராக தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்டப் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கூடுதல் கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்பவர் யாஷிகா. இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த்,

சமீபத்தில் வெளியிட்ட போட்டோ ஒன்றை பார்த்த நெட்டிசன் ஒருவர், விபத்து நேரிட்ட பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு மிகவும் அழகாக மாறிவிட்டீர்கள் என கூறி இருக்கிறார். இதற்கு பதில் கொடுத்த யாஷிகா ஆனந்த்,” நான் எந்த விதமான பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவே இல்லை. எப்போதும் போல தான் எனது உடல் இருக்கிறது” என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.