தளபதி விஜய் குரலில் ‘GOAT’ முதல் சிங்கிள் பாடல் – டீசர் இதோ!

தளபதி விஜய் குரலில் ‘GOAT’ முதல் சிங்கிள் பாடல் – டீசர் இதோ!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு விஜய்யின் GOAT படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் இந்த பாடலால் தளபதி ரசிகர்களை ரெட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா – தளபதி காம்பினேஷனில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படம் உருவாகியுள்ளது. இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளது தான் அனைவருக்கும் உள்ளது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “Goat” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக பட குழு அறிவித்திருந்தது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.