ஊரில் 1,200 கோடி சொத்துக்கு முதலாளி லண்டன் வந்து பிச்சை எடுக்கும் கஜேந்திரகுமார்



2019 ஆண்டு கணக்கின் படி 12 ஆயிரம் கோடி சொத்து, தற்போது 15,000 கோடி  Lolc ( லீசிங் கம்பனி)  3,200 கோடி பங்கு, கஜேந்திரகுமாருக்கு உள்ளது. இதனை நீங்கள், LOLC இணையத்தில் செக் பண்ணிப் பார்க்க முடியும்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் யார் என்றால் தமிழ்த் தேசியவாதி, தமிழின காவலன், Mr.N.சுகாஸ் இடம் கேட்டால் தற்போது வாழும் தமிழின தலைவன் என்பார்கள். ஆனால் தனிநாடு கேளுங்கள், தனி நாட்டு கோரிக்கையை முன் வையுங்கள் என்று இவருக்கு காசுகளை வாரி வழங்கும் புலம்பெயர் தமிழர்கள் கேட்டால்கூட அதையெல்லாம்   கேட்க முடியாது வேணுமென்றால் நீங்கள் வந்து கேளுங்கள் என்பார். 

அது ஒரு பக்கம் இருந்தாலும் இவரின் உண்மை முகம் தற்போது வெளிவந்துள்ள நிலையில் ஏன் அவர் அவ்வாறு சொன்னார் என விளங்கும். ஆம் மிகவும் படித்த கோடீஸ்வரர் இவர், ஒரு பெண்ணுக்கு ஆசனம் கொடுக்கவில்லை என்பதற்காக, தம்பியை மீட்க கோட்டாவிடம் சரணடைந்து தமிழினத்தை காட்டிக்கொடுத்த  கட்டை கஜேந்திரனுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தார்.

தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் இயங்கி வந்தார், கட்சிக்குள் கேள்வி கேட்பவர்களை வெளியில் அனுப்பினார், தவிர தமிழர்களின் உரிமை குரலால் சில விடயங்களில் குரல் கொடுத்திருந்தார். அதனை நாம் மறுக்கவும் இல்லை.  இதன் மூலமாக நேரடியாக ஒரு ஆசனத்தையும், போனஸ் மூலமாக ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தார். ஆனால் இந்த வெற்றிக்காக அவரிடம் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருந்தாலும், ஒரு ரூபாய் கூட செலவளித்ததில்லை,  பல வாகனங்கள் இருந்தாலும் அவற்றை கட்சிக்காக பயன்படுத்தியதும் இல்லை, எந்த வறிய தமிழ் குடும்பங்களுக்கும் ஒரு ரூபாய்கூட கொடுத்ததுமில்லை, ஆனால் தீவிர தமிழ் தேசியவாதி.

இவ்வாறான நிலையில்தான் இவர் (கஜேந்திரகுமார்) கொழும்பில் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் தொடர்பில் பல தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது. இவர் நமால் ராஜபக்ஷவை எப்படி அணுகுவார், எங்கே எல்லாம் தண்ணிப் பார்டி நடக்கும் என்பதனை அடுத்த செய்தியில் பார்க்கலாம். ஆனால் இவர் தற்போது லண்டனில் உள்ள தமிழர்களின் பணத்தை கறக்க சென்றுள்ளார். லண்டனில் ஒரு நாள் சந்திப்பு ஒன்றை நடத்திய கஜேந்திரகுமார், பின்னர் லண்டனுக்கு வெளியே சென்று, பங்கு ஆட்டிறைச்சி சமையல் உண்டு விட்டு சாவகாசமாக மீண்டும் லண்டன் வந்து காசு கலக்ஷனில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். 

கடும் குளிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு வேலை செய்து. கை விறைக்க விறைக்க தமிழர்கள் உழைக்கும் காசில் ஒரு பகுதியை சில தமிழர்கள் இவரை நம்பிக் கொடுக்கிறார்கள். 1,200 கோடிக்கு மேல் சொத்துகளை வைத்துள்ள கஜேந்திரகுமாருக்கு ஏன் காசு கொடுக்க வேண்டும். தனது சொத்தில் ஒரு நயா பைசாவை செலவு செய்யாமல், போலி தமிழ்த் தேசியம் பேசி தமிழர்கள் தலையில் மிழகாய் அரைக்கும். இந்த கஜேந்திரகுமாரைப் பற்றி இன்னும் பல விடையங்கள் வெளியாக உள்ளது. 

புதியது பழையவை

தொடர்பு படிவம்