லண்டனை அடுத்துள்ள ஷபீல் என்னும் நகரில், 12 வயதுச் சிறுவன் ஒருவன் காரை எடுத்து ஓட்டிச் சென்று மூதாட்டி ஒருவர் மீது மோதியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்ற நிலையில். முதலில் தந்தை தானே காரை ஓடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இருப்பினும் சில CCTV கமராக்களை வைத்து, சிறுவனே காரை ஓடியதாக பொலிசார் கண்டு பிடித்த நிலையில். பொலிசார் குறித்த சிறுவனைக் கைதுசெய்துள்ளார்கள்.
60 வயதான அந்த மூதாட்டி ஸ்தலத்திலேயே இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை 12 வயதுச் சிறுவனுக்கு காரை ஓடக் கொடுத்த கார் உரிமையாளர் மீதும் சட்டம் பாயும் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.