தான் நேரடி அரசியலில் இறங்கியமையால், சில முகம் தெரியாத தரப்பினர் விசமத்தனமான அபத்தக் குற்றச்சாட்டுகளையும் கூறி வருவதாக ஊடகவியலாளர் வித்தியாதரன் விசனம் தெரிவித்துள்ளார். ஆனால் வித்தியால் பாதிக்கப்பட்ட இளைஞர், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில். அவர் உயிர் பிழைத்துள்ளார். தற்போது பொலிசார் மாணவனை விசாரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். இருப்பினும் தான் மாணவனோடு உடல் உறவில் ஈடுபடவில்லை என்று வித்தி மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஊடகப் பட்டறிவு கொண்ட நான் அரசியலில் நேரடியாக இறங்கியமையை அடுத்து என் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் துர்நோக்கில், வெளியில் தம்மை அடையாளப்படுத்தாத சில அநாமதேய சமூக ஊடகத் தரப்புகளும், ஓர் அச்சு ஊடகங்கமும் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய்த் தகவல்களையும், ஆதாரமேயற்ற புனைகதைகளையும் பெரும் எடுப்பில் பரப்பி வருகின்றன என்பதை விசனத்துடன் சுட்டிக்காட்டுகின்றேன், என்று தனது மறுப்பு அறிக்கையில் வித்தி தெரிவித்துள்ளார்.