நடக்கிறது உண்மை. ஆனால் எவரும் பேச மாட்டார்கள். ஏன் என்றால் மன்னார் மற்றும் மடு ஆகிய இடங்களில் வத்திக்கான் ஆட்சி தான் இடம்பெற்று வருகிறது. நேற்று புனித வெள்ளியை உலகம் தோறும் உள்ள அனைத்துக் கிறீஸ்த்தவ மக்களும் கொண்டாடிய நிலையில். மன்னார் மடுவில் மட்டும், திடீரென காலை 9 மணி முதல் பல ஆயிரம் மக்களின் செல்போன்கள் வேலைசெய்யவில்லை. காலை முதல் மாலை வரை இப்படி நடந்துள்ளது. போனில் சிக்னல் இல்லை. ஏன் என்று கேட்டால் இது எல்லாம் மாதாவின் விளையாட்டு என்கிறார்கள்.
நாங்கள் சொல்ல வருவது மேரி மாதா அல்ல.. அல்ல.. அல்ல.. மாதா பெயரில் அடாவடி செய்யும் பாதிரியார் பற்றித் தான். அதுவும் மடு மாதாகோவில் பாதிரியார் பற்றி. உங்கள் எல்லோருக்கும் ஒரு கேள்வி எழும், ஏன் செல் போன் சிக்னலை ஜேம் செய்து நிறுத்தவேண்டும் என்று. ஏன் என்றால் பல கிரூஸ்த்தவர்கள் புனித வெள்ளியன்று போனை நோண்டிக் கொண்டு ,சமூக வலையத் தளங்களில் சஞ்சரிப்பார்களாம். கோவிலுக்கு வர மாட்டார்களாம். இதனால் அவர்களின் மெயின் பயிண்டை ஆஃப் செய்தால், அவர்களுக்கு பொழுது போகாமல் சரி கோவிலுக்கு செல்லலாம் என்று நினைத்து வருவார்கள் என்பது, பாதிரியாரின் கணக்கு.
ஆனால் மற்ற நபர்களை சற்றேனும் சிந்தித்தார்களா ? ஒரு அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸை அல்லது பொலிசாருடன் தொடர்பு கொள்ள முடியாதே. எந்த ஒரு நாட்டிலாவது இப்படி நடக்குமா ? சொல்லுங்கள். கேள்வி கேட்டால் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வந்து பாதிரியாருக்கு வக்காளத்து வாங்குவார். மக்கள் பயத்தில் இருக்கவேண்டிய சூழ் நிலைதான். உண்மையில் சொல்லப் போனால் தற்போது இலங்கையில் சிங்களவர்களிடம் இருந்து அச்சுறுத்தல் இல்லை... மாறாக இந்த வத்திக்கான் கோஷ்டியிடம் இருந்து தான் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது. இதை எல்லாம் எங்கே போய் சொல்ல ?