கிளவி செத்த அடுத்த செக்கன் £60 பவுண்டை ஆட்டையை போட்ட பரா மெடிக்ஸ் வெள்ளைக்காரன்


 

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், 94 வயது மூதாட்டி இறந்த அடுத்த செக்கன் அவரது பணத்தை(£60) எடுத்திருக்கிறார் பரா மெடிக்ஸ் மருத்துவர். வெட்க்கி தலை குனியவைக்கும் இந்த அருவருப்பான சம்பவம் லண்டனில் நடந்துள்ளது. லண்டனை அடுத்துள்ள Shrewsbury என்ற கிராமத்தில், 94 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். அவர் திடீரென மயக்கம் அடைந்ததை அடுத்து, மகன் 999 க்கு டயல் செய்து அம்பூலன்ஸை வரவளைத்துள்ளார். அங்கே வந்த பராமெடிக்ஸ் மருத்துவர் பரிசோதனை செய்ததில், மூதாட்டி பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார் என்பதனை அறிந்தார்கள்.

உடனே மூதாட்டியை மீண்டும் எழுப்ப முயற்ச்சிகள் செய்தார்கள். 20 நிமிட போராட்டத்தின் பின்னர் மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இதேவேளை அங்கே நின்ற 58 வயதான பரா மெடிக்ஸ் மருத்துவர் மூதாட்டி பணம் வைத்திருந்த இடம் சென்று அங்கே இருந்த £60 பவுண்டை எடுத்துவிட்டார் அதனை அவர் பாக்கெட்டில் வைக்க முனைந்தவேளை தான் அங்கே CCTV கமரா இருப்பதை அவதானித்து விட்டார். உடனே பணத்தை திரும்பவும் அதே இடத்தில் வைத்துவிட்டார். ஆனால் அனைத்தும் பதிவாகி விட்டது.

இதனை அடுத்து பொலிசார் அவரை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்திய நிலையில். எந்த ஒரு வழகையும் தொடர எனக்கு விருப்பம் இல்லை. இந்தச் செயல் மிகவும் அருவருக்கத் தக்கது , என்று கூறிவிட்டார் மூதாட்டியின் மகன். இதனால் நீதிபதி எச்சரிக்கை செய்து மருத்துவரை விடுதலை செய்துள்ளார். கீழே வீடியோ இணைப்பு. 



புதியது பழையவை

தொடர்பு படிவம்