ஒரு சிலருக்கு பணம் வந்தால் தலை கால் தெரியாமல் ஆடுவார்கள், இரவிலும் குடை பிடிக்க வேலை ஆட்களைப் போடுவார்கள். பெரும் பந்தா காட்டுவார்கள். ஆனால் நேரம் வந்தால் எல்லோருக்கும் சாவு தானாக தேடி வரும் என்பதே உண்மை ஆகும். 2 பிள்ளைகளின் தந்தை, வெறும் 43 வயதில் Cash-APP என்ற ஆப் மூலமாக அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகளாவிய ரீதியில் பல பில்லியன் டாலர்களை சம்பாதித்தவர் பாப் லீ...
புதன் கிழமை அதிகாலை 2.30 மணி அளவில், பாப் லீ தனது அப்பாட்மென் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து சற்று அருகாமையில் ஓட முடியாமல் அமர்ந்து விட்டார். வீதியில் செல்லும் நபர்களைப் பார்த்து, தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் யாரும் முன்வரவில்லை. காரணம் அவர் போதையில் இருப்பதாக பலர் நினைத்துவிட்டார்கள். ஆனால் அவரை யாரோ 2 தடவை கத்தியால் குத்தியுள்ளார்கள். ஒன்று நெஞ்சில் மற்றது அவரது இடுப்பில் .
ஏன் குத்தப்பட்டார் ? எப்படி எங்கே வைத்து குத்தினார்கள் என்பது எல்லாமே இன்றுவரை பெரும் மர்மாக உள்ளது. மில்லியன் அல்ல பில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கும் மற்றும் அமெரிக்காவில் மிக மிக பிரபல்யமான மனிதர், பாப் லீ. எந்த TVல் பார்த்தாலும் அவர் பேட்டி தான் நிகழ்ச்சியாக போய்கொண்டு இருக்கும். ஆனால் இறுதியில் வீதியில் அமர்ந்து உயிருக்கு போராடி மக்களிடம் உதவிசெய்யக் கோரி கெஞ்சி. கடைசியில் உயிரிழந்துள்ளார். பொலிசார் பெரும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளார்கள். இதன் பின்னால் உள்ள பல மர்மங்கள் விரைவில் வெளியாகும்.