ரஷ்ய தலைநகர் மொஸ்கோவுக்கு அருகே 20 தற்கொலை Drone தாக்குதல்: மக்கள் பதறியடித்து ஓட்டம் !


ரஷ்ய தலைநகர் மொஸ்கோவுக்கு அருகே உள்ள எண்ணை சுத்திகரிப்பு ஆலை, மற்றும் எலட்ராணிக் கருவிகள் செய்யும் ஆலை ஒன்றின் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 20 உக்ரைன் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் வந்து, இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் எண்ணை சுத்திகரிப்பு ஆலை வெடித்து சிதறி எரிய ஆரம்பித்துள்ளது.

இதனைக் கண்ட மக்கள் பதறியடித்து ஓடத் தொடங்கிய காட்சிகள், சமூக வலையத் தளங்களில் வெளியாகி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு மேலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

முக்கிய எலக்ராணிக் கருவிகளுக்கு சிப் செய்யும் நிலையம் ஒன்றையும் உக்ரைன் குறிவைத்து தாக்கியுள்ளது. இந்த நிலையத்தில் செய்யப்படும் சிப், டாங்கிகளுக்கு பொருத்தப்படும் ஒருவகையான சிப் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post