1995-ம் ஆண்டில் இருந்தே நடிகர் விஜய் மீது செம ஈர்ப்புக் கொண்டவராக இருந்தார் சங்கீதா. ஒரு தீவிர ரசிகையாக சங்கீதா லண்டனில் இருந்து சென்னைக்கு விஜய்க்கு பல கடிதங்களை அனுப்பி இருந்தார். 1996-ம் ஆண்டு சங்கீதா சென்னை வந்தபோது, நடிகர் விஜய் "பூவே உனக்காக" படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க சங்கீதா ரொம்பவே ஆசைப்பட்டார். அந்த நேரத்தில், பாலவாக்கத்தில் இருந்த இலங்கையைச் சேர்ந்த சுதன் என்பவர் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்ததால், அவர் சங்கீதாவைப் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கேதான் முதன்முதலாக விஜய்யைச் சங்கீதா நேரில் சந்தித்தார். "ஆ... நீங்கதான் அந்த கடிதம் போட்ட ஸ்ரீலங்கா பெண்ணா?" என்று விஜய் உடனே அடையாளம் கண்டு பிடித்துவிட்டார். இருவரும் புன்னகையைப் பரிமாறிக் கொண்டார்கள். அன்றில் இருந்து விஜய் சங்கீதா பக்கம் திருப்பி இருந்தார். அன்றைய தினமே, அந்த நபர் சங்கீதாவை விஜய் வீட்டுக்கும் கூட்டிச் சென்று ஷோபாவிடம் அறிமுகப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் (1996) இலங்கைத் தமிழர்கள் என்றாலே சென்னையில் சில இடங்களில் ஒரு தயக்கம் இருக்கும், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய்யின் அம்மா ஷோபா அப்படி கிடையாது. மிகவும் எளிமையானவர். ஒரு வெளிநாட்டு ரசிகை இவ்வளவு தூரம் தேடி வந்திருப்பதைப் பார்த்து வியந்து போய் சங்கீதாவிடம் பாசமாகப் பேசினார். அவருக்கும் சங்கீதாவை ரொம்பவே பிடித்துப் போனது.
சென்னையில் சுமார் 7 நாட்களுக்கு மேல் சங்கீதா தங்கியிருந்த நிலையில், தனது வீட்டுக்கு மீண்டும் வருமாறு விஜய் அழைத்தார். ஆனால் இம்முறை அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும் அங்கே இருந்தார். சங்கீதா விஜய் வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தபோது, ஜாடை மாடையாக சந்திரசேகர் அவர்கள் "மருமகளே" என்று அழைக்க ஆரம்பித்து, கல்யாண பேச்சுக்கு ரூட் போட்டுவிட்டார். தனது மகன் சங்கீதாவிடம் பேசும் முறையை வைத்தே அவர் மேட்டரை கணித்துவிட்டார். சரியான புத்திசாலி அப்பா! ஆகஸ்ட் 25, 1999 அன்று விஜய்-சங்கீதா திருமணம் நடந்தது. ஜோசப் விஜய் ஒரு கிறித்தவராக இருந்தாலும், இந்து முறைப்படியே இவர்களுக்கு சென்னையில் கல்யாணம் நடந்தது.
லண்டனில் இருந்து சங்கீதாவின் அப்பா, தங்கை என ஒரு பட்டாளமே சென்னை வந்து கல்யாணத்தை அமர்க்களமாக நடத்தி வைத்தது. சங்கீதாவுக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்ததால், நடிகர் விஜய்க்கும் பிரிட்டன் பாஸ்போர்ட் கிடைத்தது. பின்னர் 2 பிள்ளைகள் என குடும்ப வாழ்க்கை சூப்பராகப் போனது. ஆனால் காலம் செல்லச் செல்ல, விஜய் டாப் ஹீரோவாக வளர்ந்துவிட்டார். ஷூட்டிங், கால்ஷீட் என அவர் அலைந்ததில் வீட்டுப் பக்கம் வருவதே மிக மிகக் குறைந்து போனது. ஆறுதலாகப் பேச ஆசைக்காதலர் பக்கத்தில் இல்லை என்ற ஏக்கம் சங்கீதாவிற்கு ஏற்பட்டது. பிள்ளைகள் இருக்கும் வரை எல்லாம் ஓகே-வாக இருந்தது. ஆனால் அவர்களும் வளர்ந்து கனடாவுக்குப் படிக்கச் சென்றபோது, சங்கீதா பெரும் தனிமையில் வாடியுள்ளார்.
வீட்டில் தங்காத விஜய் ஒருபுறம், மறுபுறத்தில் சினிமாவில் அவர் நடிகைகளோடு நடிக்கும்போது ஏற்பட்ட பல கிசுகிசுக்கள் சங்கீதாவின் மனநிலையை மொத்தமாக மாற்றிவிட்டது. "ஏன்தான் ஒரு நடிகரை கல்யாணம் செய்தோமோ?" என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இப்படியே 25 ஆண்டுகள் ஓடிவிட்டது. இதற்கிடையில் நடிப்பைக் கைவிட்ட விஜய், அரசியல் கட்சியை ஆரம்பிக்க, அதிலும் அவர் படு பிசியாகிவிட்டார். கடந்த 5 ஆண்டுகளாக சங்கீதா விஜய்யைப் பிரிந்துதான் வாழ்கிறார். சில நேரங்களில் ஷோபா வீட்டுக்குச் சென்று தனது குறைகளைச் சொல்லி அழுதும் இருக்கிறார் சங்கீதா.
பாடகர் கிருஷ் அவர்களின் மனைவி சங்கீதா மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி என சங்கீதாவுக்குத் திரையுலகில் நெருக்கமான தோழிகள் இருந்தனர். அவ்வப்போது அவர்களும் இவருக்கு ஆறுதல் கூறி வந்தார்கள். ஆனால் கடைசியில், கடந்த மாதம் 27-ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று சங்கீதா மனு கொடுத்துள்ளார். விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க, மகன் ஜேசன் சஞ்சய் அம்மா பக்கம் சாய்ந்துவிட்டார். அப்பாவோடு பேசுவதையே அவர் நிறுத்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா அப்படி இல்லை. அப்பாவையும் அம்மாவையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று இன்றுவரை போராடி வருகிறார்.
திவ்யா ஷாஷா ஒரு நல்ல பேட்மிண்டன் பிளேயர். விஜய் வெளிநாடுகளுக்குப் படப்பிடிப்புக்குச் சென்று திரும்பும்போது பேட்மிண்டன் ராக்கெட் மற்றும் தேவையான பொருட்களை வாங்கி வந்து மகள் திவ்யாவுக்குக் கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று நிலைமை படு மோசமாக இருக்கிறது. சங்கீதா கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. தமிழக தேர்தல் முடிந்த பின்னர் இந்த விவாகரத்து வழக்கை அவர் போட்டிருக்கலாம். தற்போது இந்த வழக்கை போட்டால் அது ஒரு பெரிய பேசுபொருளாக மாறும் என்பது அவருக்குத் தெரியாத விஷயம் அல்ல. மேலும், சிலர் சரியான டைமிங் பார்த்துதான் சங்கீதா இந்த வழக்கைத் தொடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். எது எப்படியோ, இந்த விவாகரத்து விவகாரம் விஜய்யின் வாக்கு வங்கியை சுமார் 2% வரை குறைத்துள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே "ஜன நாயகன்" படத்தை விஜய் நம்பி இருந்தார், அது ரிலீஸ் ஆகவில்லை. தற்போது இந்தச் சிக்கல் வேறு. கூட்டணிக்கு கட்சிகள் வரவில்லை, விஜய் தனித்தே நிற்கிறார்.
இவையெல்லாம் விஜய்யின் அரசியலை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விஜய் செம கான்பிடண்ட்டாக (Confident) நிற்கிறார். அதுமட்டும் நூற்றுக்கு நூறு உண்மை!
