கான்பூர்: உங்கள் தம்பியை விடுவிக்க வேண்டுமானால், நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்ற மிரட்டல் கடிதம் வந்ததை கண்டு, அண்ணன் அதிர்ந்துபோய்விட்டார். இதையடுத்து, இந்த கடிதத்துடன் போலீசுக்கு ஓடினார்.. அங்கே என்ன நடந்தது ?
உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ளது பண்டாரஹா என்ற கிராமம்... இங்கு வசித்து வருபவர் சஞ்சய் குமார்... கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரர் சந்தீப்.. 27 வயதாகிறது..
சமீபத்தில், சஞ்சய் குமாருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.. அந்த கடிதத்தில், "உங்கள் தம்பி சந்தீப்பை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை உங்களிடம் விடுவிக்க வேண்டுமானால், 50,000 ரூபாய் உடனடியாக தர வேண்டும். இல்லாவிட்டால் அவரை கொன்றுவிடுவோம்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
நாற்காலி : இந்த கடிதத்தை பார்த்ததுமே சஞ்சய் குமார் அதிர்ந்துபோனார்.. பிறகு, சிறிதுநேரத்தில் சஞ்சய்குமாரின் செல்போனுக்கு ஒரு வீடியோவும் வந்தது... அதில், ஒரு நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தீப் பதற்றத்துடன் காணப்பட்டார்.. இதனால், சஞ்சய்குமார் என்ன செய்வதென்றே தெரியாமல் போலீசுக்கு ஓடினார். தனக்கு யாருடனும் இதுவரை முன்விரோதம் கிடையாது என்றும், யாரிடமும் இதுவரை கடன்வாங்கியதுகூட கிடையாது என்றும் போலீசில் கூறினார்.
போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டனர். உண்மையிலேயே, சஞ்சய்குமாருக்கு யாருடனும் தகராறு, சண்டை, முன்விரோதம் எதுவுமே கிடையாது என்பதை உறுதி செய்துகொண்டனர். ஆனால், ஒருநபரை கடத்தி கொண்டுபோய் வைத்து கொண்டு, வெறும் 50 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்களே? என்று போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
மிரட்டல் கடிதம்: அதனால், சஞ்சய் குமாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை படித்தபோதுதான், அதில், "கொலை" என்ற ஆங்கில வார்த்தையில் எழுத்துப்பிழை இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்... பிறகு, மிரட்டல் வீடியோ அனுப்பப்பட்டிருந்த சந்தீப்பின் செல்போன் நம்பரை கொண்டு, அவரது இடத்தை டிராக் செய்தனர். ருபாபூர் என்ற இடத்தில், செல்போன் டவர் காட்டியதால், அங்கு விரைந்து சென்றனர்.. ஆனால், சந்தீப் மட்டுமே இருந்தார், அவருடன் வேறு யாருமே கடத்தல்காரர்கள் இல்லை.. எனவே, போலீசாருக்கு சந்தீப் மீது மேலும் சந்தேகம் எழுந்தது.. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "என்ன நடந்தது? யார் கடத்தியது? கடத்தல் சம்பவம் குறித்து ஒரு பேப்பரில் எழுதி தரும்படி போலீசார் கேட்டனர். அதே எழுத்துப்பிழை: உடனே சந்தீப்பும் கடகடனவென கடத்தல் சம்பவம் குறித்து எழுதினார்.. சஞ்சய் குமாருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், கொலை என்ற வார்த்தையில் எழுத்துப்பிழை இருந்தது போலவே, சந்தீப் எழுதிய அதே வார்த்தையில், அதே எழுத்துப்பிழை இருந்தது... இதற்கு பிறகு, சந்தீப்பை உரிய முறையில் போலீசார் விசாரித்தபோது, மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.
அதாவது, மிர்சாபூரில் உள்ள கரும்பு கொள்முதல் மையத்தில் வேலை பார்த்து வருகிறாராம் சந்தீப்.. கடந்த 30ம் தேதி சஹாபாத் என்ற இடத்தில், பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, முதியவர் மீது தெரியாமல் மோதிவிட்டாராம்.. இதில் முதியவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.. இதனால் சந்தீப்பிடம் முதியவர் தரப்பில் இழப்பீடு கேட்டுள்ளதாக தெரிகிறது.. இந்து இழப்பீடு பணம் 50 ஆயிரம் தன்னிடம் இல்லாததால்தான், அண்ணனை ஏமாற்ற முடிவு செய்தாராம். கைது: எனவே, 50 ஆயிரம் பணத்துக்காக ஏமாற்றி, தனக்குதானே தன்னை கடததல் நாடகமாடியதாக சந்தீப் சொன்னார்.. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.