அதிர்ச்சியில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிள்: விவாகரத்து குறித்த குற்றச்சாட்டுகள்


இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிள் தங்களின் திருமண வாழ்க்கை குறித்து வானிட்டி ஃபேர் இதழில் வெளியான சர்ச்சையான கட்டுரையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். "அமெரிக்கன் ஹஸ்டில்" என தலைப்பிடப்பட்ட இந்த கட்டுரை, இவர்கள் இருவரின் உறவை பற்றி விமர்சிக்கிறது. மேகன் தனது கணவருக்கு “பாதுகாவலர்” பங்கு வகிக்கிறார் என்றும், ஹாரி அவரது ஆசைகளை நிறைவேற்றும் “உதவியாளர்” எனக் கூறியுள்ளது அந்தச் செய்திக் குறிப்பு.

இந்த கட்டுரை, லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத் தீ பாதிப்புகளில் இருந்து மீண்டவர்களை சந்திக்க ஹாரி மற்றும் மேகன் சென்ற நிகழ்வில் இருந்து உருவான மக்கள் கேள்விகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. அதாவது லாஸ் ஏஞ்சஸில் மக்கள் காட்டுத் தீ யால் அவதியுற்றவேளை, அவர்களை பார்கச் செல்கிறேன் என்ற போர்வையில் சென்று போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்கள் , மெகான் மற்றும் ஹரி. இது அமெரிக்க மக்கள் இடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீயால் பாதிக்கப்பட்ட மக்களை பார்கச் சென்றபோது, அப்போது மேகன் மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்; ஆனால், ஹாரி விருப்பமின்றி இருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.இளவரசர் ஹாரியின் இந்த தோற்றம் குறித்து, அரச குடும்ப வல்லுநர் டெஸ்ஸா டன்லாப் கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது, "அமெரிக்க வாழ்க்கைக்கு முழுமையாக உட்பட ஹாரி பாடுபடுகிறார். அதே சமயம், மேகன் மிகவும் இயல்பாக கலந்துக் கொள்கிறார். ஹாரி கலிஃபோர்னியாவின் சூழலில் தனித்துவமாகத் தெரிகிறார்," என்று குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிள் எந்த உத்தியோகபூர்வ விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், அவர்கள் மீதான ஊடகங்களின் தீவிர கவனம் தொடர்கிறது.


Post a Comment

Previous Post Next Post