அரசியலில் இருந்து விலக விருப்பம்: அர்ச்சுணா MP சிங்கள ஊடகத்திற்கு தெரிவிப்பு !


இதுவும் ஒரு நாடகமா தெரியவில்லை. ஆனால் நீதிமன்றில் 2 லட்சம் ரூபா பிணை கட்டி வெளியே வந்த அர்ச்சுணா MP, ஒரு சிங்கள ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றை வழங்கி இருந்தார். அதில் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அர்ச்சுணா MP, தான் ஒரு மருத்துவர் என்றும்.

மக்களுக்கு சேவை செய்யவே தான் அரசியலுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.  முன்னர் தனக்கு அரசியலில் ஈடுபட எந்த ஒரு விருப்பமும் இருந்ததில்லை என்றும். கட்டாயத்தின் பேரில் தான் அரசியலில் குதித்தவர் என்றும் தன்னை விமர்சித்துள்ளார்.

எனக்கு அரசியலில் இருந்து ஒதுங்கவே ஆசையாக உள்ளது. என்று அவர் கூறியுள்ளார். இனி என்ன எல்லாம் நடக்க இருக்கிறது என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

Post a Comment

Previous Post Next Post