Surya: ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சூர்யா - வாடிவாசல் அப்டேட்!

 


சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளதாக வெற்றிமாறன் அறிவித்தார். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கான முன்னோட்ட காட்சிகளும் அப்போது படமாக்கப்பட்டது. சூர்யா வாடிவாசல் காளைகளுடன் இருக்கும் காட்சி எடுக்கப்பட்டது. 

பின்னர் வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்குவதில் பிசியானார். இதேபோல் சூர்யாவும் கங்குவா படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்தார். தற்போது விடுதலை 2 பாகங்களை வெற்றி மாறன் எடுத்துள்ளதால், வாடிவாசல் படத்தின் மீது கவனம் சென்றுள்ளது. 

இதனால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட அறிவிப்பில், சூர்யா - வெற்றிமாறன் - தாணு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று கூறியுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post