நூற்றுக் கணக்கில் வெடித்துச் சிதறும் ரஷ்ய டாங்கிகள்: T-64 -T-62 டாங்கிகளை எப்படி அழிக்கிறது உக்ரைன்


உக்ரைனின் கேஷ் நகரில் நீண்ட காலமாக நிலை கொண்டு இருந்த ரஷ்ய ராணுவத்தை, உக்ரைன் படைகள் அடித்து திரத்தியுள்ளார்கள். இதில் ரஷ்யாவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு, பிடித்த நிலப்பரப்பை தக்க வைக்க முடியாத சூழ் நிலை தோன்றியுள்ளது. இது இவ்வாறு இருக்க சிறிய ரக ட்ரோன்களை அனுப்பி ரஷ்யாவின் T64 மற்றும் T62 ரக கவச வாகனங்களை உக்ரைன் மிகவும் சிம்பிளாக அழித்து வருகிறது. இதனால் படைகள் முன்னேற வழி இன்றி பின் வாங்கிச் செல்ல வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

தாம் கைப்பற்றிய இடத்தில் , எத்தனை ரஷ்ய கவச வாகனங்கள் அழிக்கப்பட்டு உள்ளது என்பதனை உக்ரைன் ராணுவம் வீடியோவாக எடுத்து தமது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதனைப் பார்க்க மிகவும் அதிர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாது, உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா இப்படி அடி வாங்கியுள்ளதா ? என்று எண்ணத் தோன்றுகிறது. ரஷ்யா 1960களில் தயாரித்த கவச வாகனங்களையே இன்னும் பாவித்து வருகிறது. அதனை அவர்கள் இன்னும் தரம் உயர்த்தவில்லை.

ஆனால் பிரிட்டன், அமெரிக்கா , பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் மிகவும் அதி நவீன கவச வாகனங்கள் உள்ளது. அவை வானில் வரும் எதிரி விமானங்களை பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வரும் போதே கண்டு பிடித்து, அறிவித்து விடும். மேலும் சில தாமாகவே ஏவுகணைகளை ஏவி விடும். ஆனால் ரஷ்யா இன்றுவரை பழைய கவச வாகனங்களையே இன்றுவரை போருக்கு பயன்படுத்தி வருகிறது. இது புலி வாலை பிடித்த கதையாக மாறிவிட்டது. விட்டால் ரஷ்யா தோற்றுப் போய் விட்டதாக ஆகி விடும். மேலும் உள்ளே சென்றால் அடி வாங்க வேண்டி இருக்கிறது. ரஷ்யாவின் பாடு பெரும் பாடாக உள்ளது.  கீழே வீடியோ இணைப்பு.




புதியது பழையவை

தொடர்பு படிவம்