நடிகர் விஷால் சமீபத்தில் மேடையில் பேசும் போது நடுங்கி நடுங்கிப் பேசினார். அவரால் நிற்க்க கூட முடியாத நிலை காணப்பட்டதால், ஏற்பாட்டாளர்கள் அவருக்கு நாற்காலி ஒன்றைக் கொடுத்து அமர்ந்தபடியே பேசுமாறு கூறினார்கள். மேலும் அவருக்கு கடும் காய்ச்சல் இருக்கிறது. அதனால் தான் அவர் தள்ளாடுவதாக கூறினார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்று விடையத்தை போட்டு உடைத்துள்ளார் அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர். அவர் தனது வலையத் தள குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷைலுக்கு பார்கின்சன் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கை நடுக்கம் மற்றும் உடல் நடுக்கம் உள்ளது. தசைகள் தளர்ந்து போய் இருக்கிறது. இவரை இந்த நிலையில் பார்க எனக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக நண்பர் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மதகஜராஜா படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் கொண்டாட்டமாக இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் காமெடி என்டர்டெயின்மென்டாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு நீண்ட காலங்களாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசும் போதே நடிகர் விஷால் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. குறித்த பார்கின்சன் நோய் என்பது ஒரு பரம்பரை வியாதி. இதே வியாதி அவர் அம்மாவுக்கும் இறுதி காலத்தில் இருந்ததாக அந்த நண்பர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.