எதுக்கெடுத்தாலும் TAX: ரக்டர் வண்டிகளை வெஸ்-மினிஸ்டர் முன்னால் கொண்டுவந்த உழவர்கள் !


தற்போது பிரித்தானியாவில் நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ் நிலை தோன்றியுள்ளது. பிரித்தானிய வங்கி தனது வட்டி விகிதத்தை கடுமையாக ஏற்றியுள்ளது. இதனால் சாதாரணமாக 7% தொடக்கம் 9% விகிதத்தில் இருந்த வட்டி, தற்போது 30% விகிதத்திற்கு எகிறியுள்ளது. கடன் அட்டை தொடக்கம், கடன் தொகைக்கு எல்லாமே வட்டி 4 மடங்கால் அதிகரித்துள்ள நிலையில், VAT வரி என்று வாங்கும் பொருள் அனைத்திற்கும் 20% வரி வெட்டுவதோடு. சம்பள காசிலும் 20% விகிதத்தில் வரி வெட்டுகிறார்கள்.

இது போக வீட்டில் இருப்பவர்களுக்கு, கவுன்சில் டாக்ஸ் வரி, கார் ஓடினால் ரோட் டாக்ஸ் வரி, TV வைத்திருந்தால் BBC வரி என்று பிரிட்டன் அரசு வரி மேல் வரி போட்டு, அரசை நடத்தி வருகிறது. இன் நிலையில் புதிதாக inheritance tax என்ற வரியை மேலும் இறுக்கமாக கொண்டு வருகிறார் பிரதமர் கியர் ஸ்டாமர்.

பிரிட்டனில் நீங்கள் ஒரு வீட்டை அல்லது நிலத்தை சொந்தமாக வைத்திருந்தால். அதனை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பது என்றால் அதன் பெறுமதியில் 50% விகிதத்தை வரியாக செலுத்த வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இருப்பினும் சில சட்ட ஓட்டைகளை பாவித்து, பெற்றோர் பிள்ளைகளுக்கு தமது சொத்துக்களை வழங்கி வருகிறார்கள். தற்போது நிலத்தையும் கொடுக்க முடியாதவாறு கியர் ஸ்டாமர் ஒரு வரியைக் கொண்டு வருகிறார். 

இதனை கடுமையாக எதிர்க்கும் உழவர்கள், தமது உளவு இயந்திரங்களை கொண்டு வந்து பாராளுமன்றம் முன்பாக நிறுத்தி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சுமார் 60,000 பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தாய்லாந்து , ஸ்பெயின், இத்தாலி, போலந்து போன்ற நாடுகளில் குடியேறியுள்ளார்கள். அந்த அளவு வாழ்க்கை செலவு பிரிட்டனில் அதிகரித்துள்ளது. அகதிகள் கூட தற்போது வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள் என்பது மிகவும் கேவலமான விடையமாக பார்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post