Appointment) கிடைக்கவில்லை என்று நர்ஸை அடித்த ஆப்கானிஸ்தான் அகதி இளைஞர் !


பிரித்தானியாவின் மெர்சிசைடு (Merseyside) பகுதியில் உள்ள நியூட்டன் கம்யூனிட்டி மருத்துவமனையில் (Newton Community Hospital) நேற்று (டிசம்பர் 30, 2025) மதியம் ஒரு பயங்கரமான வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 20 வயதுடைய இளைஞர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்து தனக்கு சிகிச்சைக்கான அனுமதி (Appointment) கோரியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவரை வெளியேறுமாறு மருத்துவமனை ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த இரும்புத் தடி (Crowbar) போன்ற ஆயுதத்தை எடுத்து அங்கிருந்த வரவேற்பு கவுண்ட்டரை அடித்து நொறுக்கினார்.

இந்த வெறித்தனமான தாக்குதலில், மருத்துவமனை காத்திருப்பு அறையில் (Waiting Room) இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். தாக்குதலின் போது அங்கிருந்த பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு பயந்து அலறியபடி வீதியில் ஓடி வந்த காட்சி அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது. அவர் அருகிலிருந்த ஒரு கடையில் புகுந்து உதவி கோரியதை அடுத்து, சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தன.

கைது செய்யப்பட்ட அந்த நபர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை மெர்சிசைடு போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் மீது கொலை முயற்சி (Wounding with intent), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்த ஐந்து பேருக்கும் அதே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி கவுன்சிலர் செவ் கோம்ஸ்-ஆஸ்ப்ரான் (Seve Gomez-Aspron) கூறுகையில், "மருத்துவமனை ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. இக்கட்டான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு உயிர்களைக் காத்த காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு நன்றிகள்," என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த மருத்துவமனை போலீசாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்கள் (Forensics) அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post