கொரமங்கலா பகுதியில், காதலனுக்காகத் தாயையே மகள் அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு தாயின் துரோகமும், ஒரு மகளின் ஆத்திரமும் இணைந்து ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ள இந்தச் சம்பவத்தின் பின்னணி இதோ:
வாடகை வீடுகள் மற்றும் கடைகள் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது 16 வயது மகள் அனுஜாவுடன் வசதியாக வாழ்ந்து வந்தார். ஜிம் ஒன்றில் அனுஜாவுக்கு ஏற்பட்ட விக்னேஷ் (20) என்ற கல்லூரி மாணவனின் காதல், அந்த வீட்டின் அமைதியைக் குலைக்கத் தொடங்கியது. மகளின் காதலை ஏற்றுக் கொண்ட தாய், விக்னேஷை அடிக்கடி வீட்டிற்கு வந்து தங்கவும் அனுமதித்தார். ஆனால், மகளின் இந்த நம்பிக்கையைத் தாய் சிதைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த டிசம்பர் 20-ம் தேதி சனிக்கிழமை இரவு, வழக்கம் போல விக்னேஷ் அந்த வீட்டில் தங்கியிருந்தார். நள்ளிரவில் திடீரென எழுந்த அனுஜா, ஜன்னல் வழியாகத் தனது தாயின் அறைக்குள் பார்த்தபோது நிலைகுலைந்து போனார். தனது காதலனுடன் தாய் பிரியா நெருக்கமான நிலையில் இருப்பதை நேரடிமாகக் கண்ட அனுஜா, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றார். "தாயென்ற பெயரில் நீ செய்தது இதுதானா?" என்று கேட்டுத் தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரம் முற்றிய நிலையில், அனுஜா தனது தாயை மிகக் கடுமையாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு பயந்த காதலன் விக்னேஷ் தப்பியோட, அனுஜாவோ "யாரோ மர்ம நபர் புகுந்து அம்மாவைக் கொன்றுவிட்டார்" என்று நாடகமாடினார். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதலனுக்கும் தாய்க்கும் இருந்த கள்ளத்தொடர்பு அம்பலமானது. தற்போது அனுஜாவும், அவரது காதலன் விக்னேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
