GO BACK

டிரம்பின் "அர்மாடா" அட்டகாசம்! ....ஈரானின் 1,000 ட்ரோன் பதிலடி - "எங்ககிட்டயும் சரக்கு இருக்கு" என சீறும் ஈரான் (Voice)


 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அர்மாடா" (Armada) எனப் பெயரிடப்பட்ட ஒரு மிகப்பெரிய போர்க்கப்பல் படையை ஈரான் கடல் பகுதிக்கு அனுப்பிவிட்டு, "நாங்க கிளம்பிட்டோம், பேச்சுவார்த்தைக்கு வர்றீங்களா?" என மிரட்டி வருகிறார். 'மெலனியா' ஆவணப்பட வெளியீட்டு விழாவில் செம ஸ்டைலாக நின்றுகொண்டு, "ஈரான் ஒரு அழகான இடம், அங்க ஒரு விசிட் அடிக்கப் போறோம்... ஆனா அந்தப் போர்க்கப்பல்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் வராதுன்னு நம்புறேன்" எனச் சிரித்துக் கொண்டே ஒரு 'ஷாக்' கொடுத்துள்ளார். இதைக் கேட்ட ஈரான், "ஓ... அப்படியா சங்கதி? நாங்க ஒன்னும் சும்மா இல்ல" என லோக்கல் ஸ்லாங்கில் சொல்லாமல் சொல்லி அதிர வைத்துள்ளது. 
என்ன வாசிக்க நேரமில்லையா ? கீழே வாயிஸ் ரக்காட்டா இருக்கு கேழுங்க