BREAKING NEWS : சிரித்துக் கொண்டே நீதிபதி தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக கூறினார் !


500 கோடியைக் கொட்டி படம் எடுத்துள்ள தயாரிப்பு நிறுவனத்தையோ, அல்லது சினிமா துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குறித்தோ எந்தவொரு அக்கறையும் நீதிபதிகளுக்கு இல்லை. சாவகாசமாக வாதங்களைக் கேட்டு, மதிய உணவு இடைவேளை எடுத்துவிட்டு, மீண்டும் வந்து நகைச்சுவையாகச் சிரித்துக் கொண்டே தீர்ப்பை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இதனால் தீர்ப்பு நாளை அல்லது மறுநாள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. ஆனால்...

இது விஜய்க்குச் சாதகமாக அமைந்தால், உடனே தணிக்கைக் குழு டெல்லி உச்ச நீதிமன்றம் செல்லும். இல்லை விஜய்க்குப் பாதகமாக இருந்தால் படக்குழு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும். இன்றைய வாதத்தில் முக்கிய கருத்து ஒன்றை தணிக்கைக் குழு முன்வைத்துள்ளது. அதாவது, படத்தை மறு ஆய்வு செய்ய மும்பைக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதற்கு மட்டுமே 20 நாட்கள் தேவை என்றும் கோரியுள்ளது.

எனவே, அடுத்த மாத இறுதி ஆகிவிடும். அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அதன் பின்னர் வெளியாகும் எந்தவொரு அரசியல் சார்ந்த படமும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும். தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் இலகுவாக அனுமதி கொடுத்துவிட மாட்டார்கள். எனவே 'ஜனநாயகன்' படம் தேர்தலுக்குப் பின்னர் வெளியானால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அந்த அளவு ஒன்றிய அரசு, TVK தலைவர் விஜயைப் பார்த்து அச்சம் கொண்டுள்ளதா என்றால்? அதுதான் உண்மை. விஜய்க்குத் தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய செல்வாக்கு மிக மிக அதிகமாக உள்ளது. 'ஜனநாயகன்' வெளியானால் போதும், மேலும் 5% முதல் 7% வரை வாக்கு வங்கி எகிற வாய்ப்பு உள்ளது. இந்தப் படத்தை நம்பியே விஜய் பல தொகுதிகளுக்கு இன்னும் பிரச்சாரம் செய்யச் செல்லவில்லை. இதையெல்லாம் நன்றாக வேவு பார்த்த ஒன்றிய அரசும், தி.மு.க-வும் இணைந்து நடத்தும் பெரும் நாடகம்தான் இந்தத் தணிக்கைக் குழு விவகாரம் என்பது மக்களுக்கு இன்று நன்றாகப் புரிந்திருக்கும்.

Post a Comment

Previous Post Next Post