150 விமானங்கள் தயாராக இருந்தது சரியான தருணத்திற்காக: பெண்டகன் சொல்லும் கதை !


அமெரிக்க ராணுவத்தின் மிக மூத்த அதிகாரியான ஜெனரல் ஜான் டேனியல் 'ரைசின்' கேன் (General John Daniel 'Raizin' Cane), வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை எவ்வாறு கைது செய்தார்கள் என்பது குறித்த பிரமிக்க வைக்கும்   தகவல்களை வெளியிட்டுள்ளார். புளோரிடாவில் உள்ள அதிபர் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அதிரடி நடவடிக்கையை 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' (Operation Absolute Resolve) என்று குறிப்பிட்டார். சுமார் 150 அமெரிக்க போர் விமானங்கள் இந்த ஒரு தாக்குதலுக்காக பல வாரங்களாகத் தயார் நிலையில் இருந்ததாகவும், வெள்ளிக்கிழமை இரவு அதற்கான சரியான நேரம் அமைந்ததாகவும் அவர் கூறினார்.

மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவைக் கைது செய்வதற்கான திட்டங்கள் ஆகஸ்ட் 2025-லேயே தொடங்கிவிட்டதாக ஜெனரல் கேன் தெரிவித்தார். சிஐஏ (CIA) உளவாளிகள் கடந்த பல மாதங்களாக மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்துள்ளனர். அவர் எங்கு வசிக்கிறார், என்ன சாப்பிடுகிறார், எங்கு பயணம் செய்கிறார், எந்த மாதிரியான ஆடைகளை அணிகிறார், ஏன் அவரது செல்லப் பிராணிகள் (Pets) பற்றிய தகவல்களைக் கூட விடாமல் உளவு பார்த்துள்ளனர். இந்தத் துல்லியமான தகவல்கள் தான், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இந்தச் சிக்கலான ஆபரேஷனை முடிக்க உதவியதாக அவர் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கான இறுதி உத்தரவை அதிபர் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை இரவு 10:46 மணிக்கு வழங்கியுள்ளார். "குட் லக் அண்ட் காட் ஸ்பீட்" (Good luck and God Speed) என்று ட்ரம்ப் கூறிய வார்த்தைகள் அங்கிருந்த ஒட்டுமொத்தப் படைகளுக்கும் உத்வேகத்தை அளித்ததாக கேன் நினைவு கூர்ந்தார். டெல்லிவாடை (Delta Force) வீரர்கள் மற்றும் எப்பிஐ (FBI) ஏஜெண்டுகள் அடங்கிய குழு, மதுரோவின் கோட்டை போன்ற மாளிகைக்குள் மின்னல் வேகத்தில் புகுந்து, வெறும் 30 நிமிடங்களுக்குள் அவரைக் கைது செய்து ஹெலிகாப்டர் மூலம் வெளியே கொண்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மதுரோ தற்போது அமெரிக்க கடற்படையின் USS Iwo Jima என்ற போர்க்கப்பலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் சதித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. விரைவில் அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அதுவரை வெனிசுலா நாட்டின் நிர்வாகத்தை அமெரிக்காவே தற்காலிகமாக கவனித்துக் கொள்ளும் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post