தமிழக அரசியலில் இப்போது "கூட்டணி" என்றாலே அனல் பறக்கிறது! கடந்த தேர்தலில் 25 இடங்களை வாங்கி வெறும் 18-ல் மட்டும் ஜெயித்த காங்கிரஸை பார்த்து, "இந்த முறை 18 சீட் தான் உங்களுக்கு" என திமுக சொல்ல.. "நோ நோ.. எங்களுக்கு 35 சீட் வேணும், இல்லைனா நாங்க தவெக பக்கம் போயிடுவோம்" என ஒரு குரூப் மிரட்டல் விட ஆரம்பிச்சிருக்காங்க.இதைக் கேட்டு அதிர்ச்சியான ஸ்டாலின் அவர்கள், "வெயில் நேரத்து சூரியன்" மாதிரி செம்ம டென்ஷன்ல இருக்காராம். அறிவாலயமே இப்போ அமளிதுமளியா இருக்கு!
காங்கிரஸ் ஒரு பக்கம் 35 கேட்டா, இன்னொரு பக்கம் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்டுகள்னு எல்லாரும் லிஸ்ட் ரெடி பண்ணி நிக்கிறாங்க. இவங்களுக்கெல்லாம் சீட் கொடுத்தா, திமுகவோட முக்கிய புள்ளிகள் 12 பேருக்கு இந்த முறை 'கல்தா' கொடுக்க வேண்டிய நிலைமை வரும். எங்களுக்கே ஆப்பு வைக்கிறீங்களே"னு திமுக நிர்வாகிகள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இதனாலேயே அதிருப்தியில் இருக்கும் சில புள்ளிகள், சைலண்டாக தவெக பக்கம் தாவ ரெடியாகி வர்றாங்களாம்!
அரசியல் ஒரு பக்கம் கொதிக்க, நம்ம தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தோட இசை வெளியீட்டு விழா Zee5-ல டெலிகாஸ்ட் ஆகி, டிஆர்பி ரேட்டிங்கை எகிற வச்சிருக்கு! இதுவரையிலுமே இல்லாத அளவுக்கு வரலாறு காணாத டிஆர்பி கிடைச்சதால விஜய் ரசிகர்கள் செம்ம குஷியில இருக்காங்க.
அதிமுக, திமுகவில் இருந்து முக்கிய ஆட்கள் தவெக பக்கம் போறதப் பார்த்தா, தமிழகம் இதுவரை பார்க்காத ஒரு 'திரில்லர்' தேர்தலை இப்போ பார்க்கப் போகுது. அண்ணா, எம்ஜிஆர் காலத்துல கூட இல்லாத ஒரு எதிர்பார்ப்பு, இப்போ விஜய் அரசியலுக்கு வந்ததால உருவாயிருக்கு!
