6 அமைச்சர் பதவி வேண்டும் என்று அடம் பிடிக்கும் காங்கிரஸ்- இல்லையென்றால் TVK

திமுகவுக்கு 'செக்' வைக்கும் காங்கிரஸ்: 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்டு அதிரடி அழுத்தம்!

 திமுக தரப்பிடம் 6 பெரிய அமைச்சரவை பதவிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அமைச்சரவை பதவிகளை கொடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று காங்கிரஸ் கூற உள்ளதாக கூறப்படுகிறது. பரமசிவன் தலையில் கை வைப்பது போல, இவர்கள் கேட்டுள்ள 6 அமைச்சு பதவிகளை கொடுத்தால், தமிழ் நாட்டில் திமுக ஆட்சி செய்யப்போவது இல்லை, வெறும் பொமை அரசாங்கம் போல உட்காரவேண்டியது தானாம். அதனால் ஸ்டாலின் ஐயா ரெம்பவே கடுப்பாகியுள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் நீடிப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் புதிய நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை வெறும் தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு திருப்தியடையாமல், தமிழக அமைச்சரவையில் தங்களுக்குக் குறைந்தது 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டி வருகிறது. பல தசாப்தங்களாக ஆட்சியில் பங்கு தராத திமுகவுக்கு, இந்த முறை "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கையின் மூலம் காங்கிரஸ் மேலிடம் கடும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸின் ஒரு பிரிவினர், தவெக-வுடன் கூட்டணி அமைத்தால் அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும், விஜய்யின் புதிய கட்சிக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி தமிழக அரசில் முக்கிய இடத்தைப் பிடிக்கலாம் என்றும் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி வருகின்றனர். தவெக சுமார் 20% வாக்குகளைப் பெறும் பட்சத்தில், அது காங்கிரஸின் வளர்ச்சிக்கு ஏணியாக அமையும் என்பது இவர்களின் கணக்காக உள்ளது.

இருப்பினும், ப. சிதம்பரம் மற்றும் மாணிக்கம் தாகூர் போன்ற மூத்த தலைவர்கள், இப்போதைக்கு திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது ஆபத்து என்று எச்சரித்துள்ளனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், நிதானமாகச் செயல்பட வேண்டும் என்பது இவர்களின் வாதம். இதனால், திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது விஜய்யுடன் கைகோர்ப்பதா என்ற குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ், நாளை ராகுல் காந்தி எடுக்கப்போகும் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post