இந்த பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காமல் திணறி வரும் நிலையில், சைலண்டாக வந்து சிக்ஸர் அடித்துள்ளது ஜீவாவின் 'TTT' திரைப்படம். வெறும் 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், ரிலீஸான இரண்டே நாட்களில் 4 கோடி வசூலை வாரிக்குவித்து கோலிவுட்டையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. படத்தில் காமெடி மற்றும் ஜாலி மூமெண்ட்ஸ் அதிகம் இருப்பதால், ஃபேமிலி ஆடியன்ஸ் இப்போ 'பராசக்தி'யை விட்டுட்டு 'TTT' தியேட்டர் பக்கம் வண்டியத் திருப்ப ஆரம்பிச்சுட்டாங்க!
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஜீவா கொடுத்த அதிரடி ஸ்டேட்மென்ட் தான் இப்போ சோசியல் மீடியா டாக். சிவகார்த்திகேயன் பற்றி கேட்ட கேள்விக்கு, "நான் அவருக்குப் போட்டியாளர் கிடையாது, என் படங்களைப் பார்த்துத்தான் அவர் வளர்ந்தார். அவர்தான் என்னைப் போட்டியாளராக நினைக்கணும்" எனப் பட்டாசைக் கொளுத்திப் போட்டுள்ளார். இதனால் கடுப்பான எஸ்.கே ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், 'ஜன நாயகன்' படம் ரிலீஸ் ஆகாத கவலையில் இருந்த விஜய் ரசிகர்கள், ஜீவாவின் இந்தப் பேச்சைக் கேட்டு செம குஷியாகி 'TTT' படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.
விஜய்யுடன் 'நண்பன்' படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஜீவா, "விஜய் அண்ணாவைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்; ஜன நாயகன் படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகணும்" என உருக்கமாகப் பேசியுள்ளார். இந்த ஒரு பாயிண்ட்டிலேயே ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் மனதையும் ஜீவா கவர்ந்துவிட்டார். இதனால் வர்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'TTT' படத்தின் வசூல் 'பராசக்தி'யை விட எகிறும் எனத் தெரிகிறது. மொத்தத்துல, இந்த பொங்கல் ரேஸில் "குறைந்த பட்ஜெட்.. நிறைந்த லாபம்" என ஜீவா கெத்து காட்டி வர்றாரு!
