மதுரோவின் 'குத்தாட்டம்' தான் வினையா ? டிரம்ப்பை கடுப்பேற்றிய அந்த வீடியோ இதோ
மதுரோவின் 'குத்தாட்டம்' தான் வினையா? டிரம்ப்பை கடுப்பேற்றிய அந்த வீடியோ... பின்னணியில் நடந்த அதிரடி ஆபரேஷன்!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் வீழ்ச்சிக்கு அவர் பொதுவெளியில் ஆடிய நடனம் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையிலும், மதுரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் (Nonchalance) ஜாலியாக மேடைகளில் நடனமாடி வந்ததை, அதிபர் டிரம்ப் தன்னை கிண்டல் செய்வதாக (Mockery) எடுத்துக்கொண்டாராம்.
கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச பெண்கள் தலைமைத்துவப் பள்ளியின் தொடக்க விழாவில், மதுரோ தனது சொந்த உரையான 'No War, Yes Peace' என்ற வரிகளின் எலக்ட்ரானிக் ரீமிக்ஸ் பாடலுக்குத் தனது மனைவியுடன் இணைந்து நடனமாடினார்.
அமெரிக்கா சமீபத்தில் வெனிசுலா துறைமுகம் ஒன்றின் மீது வான்வழித் தாக்குதல் (Airstrike) நடத்திய பிறகும், மதுரோ அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி குத்தாட்டம் போட்டது தான் 'கடைசிச் சொட்டு' (The final straw) நீராக அமைந்தது.
கைது செய்யப்பட்டு கைகளில் விலங்குடன் (Shackled) நியூயார்க்கிற்கு கொண்டு வரப்பட்ட போதும், மதுரோ தனது பழைய 'கூலான' பாணியை விடவில்லை. நியூயார்க் விமான நிலையத்தில் அதிகாரிகளைப் பார்த்து "Happy New Year" என்று அவர் வாழ்த்துச் சொன்னது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

No comments: