ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனைக் காட்டிக் கொடுத்து, மக்களை வைத்தே அவரைத் தூக்கிலிட்டது அமெரிக்கா. அதுபோல தற்போது கைதாகியுள்ள வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அமெரிக்காவில் வைத்துத் தூக்கிலிட அதிபர் ட்ரம்ப் (Donald Trump) முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், கைதாகியுள்ள மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் (Drug trafficking), ஆள்கடத்தல், அமெரிக்க இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டது மற்றும் கொலைக் குற்றங்கள் சுமத்தப்பட உள்ளன.
இதற்கான குற்றப்பத்திரிகையை (Charge sheet), அமெரிக்க நீதித்துறை ஏற்கனவே தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. எனவே, அமெரிக்க நீதிமன்றம் எந்தத் தண்டனையைக் கொடுத்தாலும் அது உடனே நிறைவேற்றப்படும். அந்த வகையில் மதுரோ மீது சுமத்தப்பட உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனையே தீர்ப்பாக அமையலாம். அமெரிக்காவில் பொதுவாக மரண தண்டனையை மின்சார நாற்காலி (Electric chair) அல்லது ஊசி மூலம் நிறைவேற்றுவார்கள்.
இல்லையென்றால் தீர்ப்பு கிடைத்த பிற்பாடு ஜனாதிபதியின் கருணை வேண்டி அவர் விண்ணப்பிக்கலாம். மரண தண்டனையை அதிபர் ட்ரம்ப் ஆயுள் தண்டனையாக மாற்றவும் முடியும். இதனூடாக ஜனாதிபதி மதுரோ இறக்கும் வரை, குவாண்டனாமோ (Guantanamo Bay) சிறைச்சாலையில் தனது இறுதி நாட்களைக் கழிக்க வேண்டி இருக்கும். அமெரிக்க Delta Force படையினர் வெனிசுலாவில் ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றிய வேளை மதுரோவைத் தூக்கினார்கள். ஆனால், ஏன் அவரது மனைவியையும் அமெரிக்கா தூக்கிச் சென்றது என்பது பலரது கேள்வியாக உள்ளது.
இதன் பின்னால் பெரிய ஒரு காரணம் உண்டு. ஒரு நாட்டை எடுத்துக்கொண்டால் அந்நாட்டிற்குத் தலைவர் ஒருவர் இருப்பார்; அவருக்குக் கீழே அமைச்சர்கள், அதிகாரிகள் இருப்பது வழக்கம். அவர்கள்தான் லஞ்சம் பெறுவார்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். அதில் சிலவேளை கொஞ்சப் பங்கு நாட்டுத் தலைவருக்கும் இருக்கும். ஆனால் வெனிசுலாவைப் பொறுத்தவரை, அங்கே நடக்கும் முழு போதைப்பொருள் வியாபாரத்திற்கும் தலைவரே இந்த ஜனாதிபதி மதுரோதான். வெனிசுலாவில் போதைப்பொருட்களைத் தயாரித்து, அமெரிக்கா என்ற பெரும் சந்தையில் விற்று லட்சம் கோடிகளைச் சம்பாதித்தவர் மதுரோ.
அதுபோக, வெனிசுலாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பல வகையான போதைப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. இதற்கான ஆய்வகங்களை (Laboratories) கூட ஜனாதிபதி மதுரோ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அவர் சம்பாதித்த பெரும்பணம் அவரது மனைவி பெயரில்தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல நாடுகளில் முதலீடுகள் (Investments) உள்ளன. அவை அனைத்தும் மதுரோவின் மனைவி பெயரில்தான் இருக்கின்றன. இதனால்தான் அப்படியே மனைவியையும் சேர்த்து 'லாக்' (Lock) செய்துள்ளது அமெரிக்கா. இனி கறக்க வேண்டிய பணத்தைக் கறந்துவிடும்.
