பெரும் உல்டா விடும் சிவகார்த்திகேயன்: முகத்திரை கிழிந்தது தெரியுமா ?


சினிமா வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக் 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததுதான். ஆனால், இந்த உண்மையை மறைக்க ஒரு பெரிய 'உல்டா' வேலை நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் படமான 'பராசக்தி'க்கும் சான்றிதழ் கிடைக்கவில்லை, அதனால் அந்தப் படம் ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்று சில ஊடகங்கள் செய்திகளைப் பரப்பி வருகின்றன. 'ஜனநாயகன்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கலைச் சமாளிக்க, எல்லாப் படங்களுக்கும் இதே நிலைதான் என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கவே இந்தத் திட்டமிட்ட 'பொய் செய்திகள்' பரப்பப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயன் மௌனம் காப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தன் படம் பற்றி இவ்வளவு தவறான தகவல்கள் உலவும்போது, அவர் ஏன் ஒரு 'Clarification' கொடுக்கவில்லை என்பதுதான் பலரின் கேள்வி. இதன் பின்னணியில் ஆளுங்கட்சியின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும், அவர்களின் திட்டப்படியே இந்த நாடகம் அரங்கேறுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி என வெளிநாடுகளில் 'பராசக்தி' படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜனவரி 9-ஆம் தேதியே பிரிண்ட்கள் தியேட்டருக்குச் சென்றுவிட்ட நிலையில், படம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி எனத் தெரிகிறது.

உண்மையில் 'பராசக்தி' படத்திற்கான சான்றிதழை, சென்சார் போர்டு தலைவராக இருக்கும் நடிகை ஜீவிதாவிடம் பேசி, இயக்குனர் சுதா கொங்கரா முறைப்படி பெற்றுவிட்டார் என்பது ஊர் அறிந்த ரகசியம். அப்படி இருக்கும்போது, வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தப் பார்ப்பது ஏன்? தளபதி விஜய் படம் என்றாலே மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நெருக்கடி கொடுப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கும் சென்சார் சிக்கல் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் சில அரசியல்வாதிகள், அதே சினிமாவைத் தங்கள் சுயலாபத்திற்காக அழிக்கத் துடிப்பது எந்த ஊர் லாஜிக் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. ஒரு படத்திற்குத் தடையாக இருப்பதும், இன்னொரு படத்திற்குச் சாதகமாகச் செய்திகளைப் பரப்புவதும் சினிமாவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் செயல். அரசியல்வாதிகள் போடும் இந்த 'திரைமறைவு நாடகங்களை' மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள் என்பதே நிதர்சனம்.

Post a Comment

Previous Post Next Post