Ads Top

யாழ்பாணத்தில் இறந்த இந்திய ராணுவத்திற்கு அஞ்சலி செய்யப்பட்டது !


நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய ராணுவத்தினரின் நினைவுத் தூபிக்கு, இந்திய துணை தூதுவர் சாய் முரளி அஞ்சலி செலுத்தி இருந்தார்.  

ஈழத்தில் அமைதிகாக்க என வந்த இந்தியப் படைகள், இறுதியாக ஈழத் தமிழர்களையே கொன்று குவிக்க தொடங்கிய நிலையில். வேறு வழி இன்றி விடுதலைப் புலிகள் இந்தியப் படையை எதிர்க்க வேண்டிய சூழ் நிலை தோன்றியது. புலிகள் சில ஆயிரம் பேர் மட்டுமே 1987 கால கட்டத்தில் இருந்தவேளை, இந்தியப் படையை பலமாகத் தாக்கினார்கள். இதனால் ராஜீவ் காந்தி அரசு, சுமார் 1 லட்சம் இந்தியப் படையை ஈழத்தில் குவித்தது. 

இவர்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டார்கள். ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட படையினரில் 99 சத விகிதமானவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள். இதில் குர்கா படை, ஹிந்திப் படை, சீக்கியர்கள் என்று பல பிரிவுகள் இருந்தது. இவர்கள் யாழ்ப்பாணத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கி இருந்தார்கள். இவர்களின் பிள்ளைகள் இன்றும் யாழில் இருக்கிறார்கள். 

நீண்ட காலமாக இந்திய அரசால் பொதுவெளியில் அங்கீகரிக்கப்படாமல் இருந்த IPKF வீரர்களின் பங்களிப்பை, தற்போதுள்ள மோடி அரசு முழு மனதுடன் ஏற்று அங்கீகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ராணுவ வீரர்கள் தின விழாவில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இலங்கையில் இந்திய வீரர்கள் காட்டிய துணிச்சலும் தியாகமும் மதிக்கப்பட வேண்டியவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திலும் இவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருவதோடு, அதிகாரப்பூர்வமாக 'ஐ.பி.கே.எஃப் தினம்' அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

No comments:

Powered by Blogger.