ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறி, கள்ளத்தனமாக கச்சா எண்ணெய் கடத்திய Shadow Fleet (நிழல் கடற்படை) கப்பல் ஒன்றை பிரான்ஸ் கடற்படை நடுக்கடலில் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. பிரிட்டனின் உளவுத்துறை கொடுத்த பக்காவான Intelligence தகவலின் அடிப்படையில், மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த Commando-style operation அரங்கேறியுள்ளது. 'கிரின்ச்' (Grinch) என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல், உக்ரைன் போருக்குத் தேவையான நிதியைத் திரட்ட ரஷ்யாவிற்கு ரகசியமாக உதவி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கப்பல் False flag எனப்படும் போலி அடையாளத்தைப் பயன்படுத்திப் பயணித்து வந்ததை பிரான்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக ரஷ்யா தனது எண்ணெய் விநியோகத்தின் உண்மையான இருப்பிடத்தை மறைக்க இதுபோன்ற தந்திரங்களைப் பயன்படுத்துவது வழக்கம். மேற்கத்திய நாடுகளின் கடுமையான Restrictions மற்றும் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து, சர்வதேச சந்தையில் ரகசியமாக வியாபாரம் செய்ய இந்த நிழல் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது பிரான்ஸ் கடற்படை வீரர்கள் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்து அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பிடிபட்ட கப்பல் மேலதிக சோதனைகளுக்காகத் துறைமுகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் Escort செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடின், ரஷ்யாவின் நாணய மதிப்பு சரிவதைத் தவிர்க்கவும், உக்ரைனுக்கு எதிரான போரைத் தொய்வின்றி நடத்தவும் இந்த கச்சா எண்ணெய் வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 400-க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான Shadow Fleet நெட்வொர்க்கை வேரறுக்க பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் சபதம் பூண்டுள்ளன. இதற்காகப் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து, சந்தேகத்திற்குரிய கப்பல்களை நடுக்கடலில் ஏறிச் சோதனை செய்யும் அதிகாரத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையானது ரஷ்யாவின் பொருளாதார வேரில் ஆப்பு வைக்கும் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
