அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம் போல தனது அதிரடி பேச்சால் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆப்கானிஸ்தான் போரில் ஐரோப்பிய NATO படைகள் தங்களுக்கு உண்மையாக உதவவில்லை என்றும், ஆபத்தான Front lines-ல் (முன் களத்தில்) நிற்காமல் பின்வாங்கியே இருந்தனர் என்றும் டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய அவர், "நாங்கள் எப்போதுமே ஐரோப்பாவுக்கு உதவியாக இருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் ஓடி வருவார்களா என்பது சந்தேகமே" எனத் தனது Classic style-ல் விமர்சித்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த 'இழிவுபடுத்தும்' பேச்சால் கடுப்பான NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, அவருக்கு ஒரு Reality check கொடுத்துள்ளார். "செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவுக்காக ஆப்கானிஸ்தானில் ஐரோப்பிய வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள்" என்று ரூட்டே சுட்டிக்காட்டினார். அமெரிக்கா தாக்கப்பட்டபோது முதல் ஆளாக ஓடிவந்தது இதே ஐரோப்பிய நாடுகள் தான் என்பதை டிரம்ப் வசதியாக மறந்துவிட்டதாக அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
உண்மையில், ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக நின்ற பல நாடுகள் பெரும் உயிர்ச்சேதத்தைச் சந்தித்துள்ளன. குறிப்பாக பிரிட்டன் மட்டும் சுமார் 457 வீரர்களைப் பலிகொடுத்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளும் நூற்றுக்கணக்கான வீரர்களை இழந்துள்ளன. ஆனால், டிரம்ப்போ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், "அவர்கள் சும்மா பெயருக்குத்தான் ஆட்களை அனுப்பினார்கள், அவர்களால் எங்களுக்குப் பெரிய லாபம் இல்லை" எனத் தொடர்ந்து Insult செய்து வருவது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. Military alliance என்பது ஒரு இருவழிப் பாதை (Two-way street) என்று கூறும் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் தற்காப்புக்காக அதிகப் பணம் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், ஏற்கனவே ரத்தமும் சதையுமாக அமெரிக்காவுக்கு உதவிய நட்பு நாடுகளை இப்படி மட்டம் தட்டுவது, எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
