விஜய்க்கு விழுந்த செக் ! ஜனநாயகன் ரிலீஸை தடுத்த டெல்லி -இன்று நடக்கும் அந்த ஒரு விஷயம் என்ன


தமிழக அரசியலையும் சினிமா உலகையும் ஒருசேர உலுக்கி வரும் 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரத்தில், இப்போது டெல்லி நேரடியாகக் களம் இறங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி P.T. ஆஷா அவர்கள், "படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த தணிக்கை வாரியம் (CBFC), மின்னல் வேகத்தில் மேல்முறையீடு செய்தது. நேற்று வெள்ளிக்கிழமை இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "மதியமே விசாரிக்கிறோம்" என்று தயாராக இருந்தும், தணிக்கை குழு வக்கீல் கால அவகாசம் கேட்டு பின்வாங்கியதுதான் இப்போது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுவிட்டு வெளியே சென்ற தணிக்கை குழு வக்கீல், நீண்ட நேரம் போனில் பேசிவிட்டுத் திரும்பி வந்து, "இன்று வேண்டாம், திங்கட்கிழமை வைத்துக்கொள்ளலாம்" என்று கூறினார். அவர் யாரிடம் பேசினார்? டெல்லி உயர்மட்ட அதிகாரிகளிடம் இருந்து வந்த ரகசிய உத்தரவுதான் இந்த பின்வாங்கலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திங்கட்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து இந்தியாவின் டாப் வக்கீலான துஷார் மேத்தா (Solicitor General Tushar Mehta) சென்னை வரவிருக்கிறார். ஒரு மாநில நீதிமன்றத்தில் நடக்கும் சினிமா வழக்காக இதற்கு ஏன் டெல்லி இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்!

கிடைத்த தகவலின்படி, இன்று சனிக்கிழமை டெல்லியில் தணிக்கை குழுவின் முக்கிய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். அங்கு எடுக்கப்படும் முடிவுகளை வைத்து, திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விஜய்க்கு எதிராக எந்தெந்த பாயிண்டுகளைப் பேச வேண்டும் என்று மேத்தாவிற்கு 'ஸ்கெட்ச்' போட்டுத் தரப்பட உள்ளதாம். விஜய்யின் அரசியல் வளர்ச்சி மற்றும் அவரது TVK கட்சியின் செல்வாக்கு, எதிர்வரும் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவரை இப்போதே முடக்க மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

விஜய்யை ஒரு சாதாரண நடிகராக மட்டும் பார்க்காமல், ஒரு பெரும் மக்கள் சக்தியாக டெல்லி கருதுவது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. "ஜனநாயகன்" படம் ரிலீஸ் ஆனால் அது விஜய்யின் வாக்கு வங்கியை 35% வரை உயர்த்திவிடும் என்ற பயமே, ஒரு படத்தின் சென்சார் விஷயத்தில் ஒரு நாட்டு அரசே இவ்வளவு மெனக்கெடுவதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நடக்கப்போகும் அந்த 'மெகா' மோதலில் வெல்லப்போவது விஜய்யா அல்லது டெல்லியா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post a Comment

Previous Post Next Post