3 பேரைக் கைது செய்தும் இந்த சமீர சில்வா யார் என்பது பற்றி எந்த பின்னனியும் இல்லை. இவர் ஒரு GHOST , என்கிறார்கள் பொலிசார். தற்போது மக்கள் உதவியை நாடியுள்ளது பொலிஸ். எந்த மாதிரி அடிச்சும் இவன் வாயே திறக்கவில்லை.
இலங்கையின் கொஹுவல (Kohuwala) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடோவிட்ட (Badowita) பகுதியில், கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி இரவு ஒரு பயங்கர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு சுமார் 9:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஒரு வீட்டிற்கு வெளியே திடீரென சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் அங்கிருந்த 17 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், காயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு களுபோவில போதனா மருத்துவமனையில் (Kalubowila Hospital) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து இலங்கை பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் தற்போது முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையே நிலவும் மோதல் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடந்த ஜனவரி 15-ஆம் தேதி, தெமட்டகொட மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27, 32 மற்றும் 35 வயதுடைய இந்த நபர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையின் கொழும்பு புறநகர் பகுதிகளில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்களில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள 'மாஸ்டர் மைண்ட்' (Mastermind) யார் என்பது குறித்தும், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்தும் பொலிஸார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். பாடோவிட்ட மற்றும் கொஹுவல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
